எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பண்டிண்டா (பஞ்சாப்), ஜூலை 2  மோடி அரசு 2017- ஆம் ஆண்டு நாடு முழுவதும் 13 இடங்களில் எய்ம்ஸ் மருத்து வமனைகள் திறக்கப்படும் என்று அறிவித்தது. இதற்கான தொகைகள் முடிவு செய்யப்பட்டு சுகாதாரத்துறை அமைச் சகம் பட்டியல் வெளியிட்டது. இந்த நிலையில் ஓராண்டு முடிந்தும் இதுவரை 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அறி விப்பில், 5 மாநிலங்களில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மத்திய அரசு ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. இதில் சமீபத் தில் தமிழகத்தில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை யும் அடக்கம்.

நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, நாடு முழுவதும் உயர்தரமான மருத்துவமனைகளைத் திறப்பேன் என்று கூறி, தேர்தல் பிரச்சாரம் செய்தார். இந்த நிலையில் முழுப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பிறகு டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை போன்று நாடு முழுவதும் திறக்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டார். 2014- ஆம் ஆண்டு அறிவித்த அறிக்கையோடு அந்த பேச்சு முடிவிற்கு வந்துவிட்டது. இந்நிலையில் 2017-ஆம் ஆண்டு திடீரென்று நாடு முழுவதும் 17 இடங் களில் எய்ம்ஸ் மருத்துவமனை என்று அறிவித்தார். பிறகு இது 13 ஆக குறைந்தது.

ஜம்மு -காஷ்மீரில் இரண்டு, பீகாரில் ஒன்று, குஜராத்தில் ஒன்று, மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநி லங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்கப்படும் என்று அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்பின்னர் 13 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2014--2015, 2015 -2016 மற்றும் 2017---2018 மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. இதில் எந்த ஒரு திட்டமும் முடிவடையும் வகையில் இல்லை.

நிதி ஒதுக்கீடு இல்லை

குறிப்பாக 5 மருத்துவமனைகள் அறிவிப்புகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் ஆர்.டி.அய். தகவல் மூலம் தெரியவந்துள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க  மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதற்கும் இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை  பஞ்சாப் மாநிலம் பண்டிண் டாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் ''நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் போது மத்திய அரசு, மாநிலங்கள் முழுவதும் திடீரென்று எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த அறிவிப்புகளை வரிசையாக வெளியிட்டு வருகிறது. ஒரு பெரிய மருத்துவமனை குறித்த அறிவிப்பு வெளியிடவேண்டுமென்றால் அதற்கான நிதியை ஒதுக்கி கட்டட வரைபடப் பணிகள், ஒப்பந்த விவரங்கள் அனைத்தும் வெளியிட்ட பிறகு அந்த அறிவிப்பு வெளியிடப்படவேண்டும். வரைபடப் பணி கள் மற்றும் ஒப்பந்த விவரங்கள் சில நேரங்களில் மாநில அரசுகள் இடம் ஒதுக்கிய பிறகு மாற்றம் கொண்டுவர விதிமுறைகள் உள்ளன. ஆனால், இதில் எதுவுமே இல்லாமல் அறிவிப்பு வெளியிட முடியாது. இந்த நிலையில் அரசு வெளியிட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த நிதி ஒதுக்கீடுகள் மற்றும் வரைபடங்கள் கேள்விக்குரியது'' என்று தெரிவித்துள்ளார்.

அவரது கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறையும், நிதி அமைச்சகமும் அதிர்ச்சிகரமான தகவலைக் கொடுத்துள்ளது, அதாவது இதுவரை அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத் துமே பெயரளவிற்கு மட்டுமே என்றும், முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு நிதி சொற்ப அளவே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது. மேலும் இந்த மருத்துவமனைகளை கட்டி முடிக்க எந்த ஒரு காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை.

மேற்கு வங்க நிலை என்ன?

மேற்குவங்கம் கல்யாணி பகுதியில்தான் இந்த அரசால் முதல் முதலாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. இதற்கான 1000 கோடி என்று அறிவித்தார்கள். ஆனால், இதுவரை வெறும் 270 கோடிகள் மட்டுமே கொடுத்துள்ளனர். இதில் குறிப்பிட்ட தொகை மாநிலத்தின் நலத்திட்டத்திற் கென சில தனிப்பட்ட நபர்கள் நன்கொடைகளாக வழங் கப்பட்ட தொகையும் உள்ளடங்கும் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த மேற்குவங்க எய்ம்ஸ் மட்டுமே 2020- ஆம் ஆண்டு முடிக்கப்படும் என்று காலக்கொடு இறுதி செய்யப்பட்டது. ஆனால், இன்றளவும் மாநில அரசு இடம் ஒதுக்கித்தந்தும் எந்தஒரு பணியும் நடைபெற வில்லை.

மற்ற மாநிலங்களான இமாச்சலப்பிரதேசம், பீகார், தமிழ்நாடு, குஜராத் போன்ற மாநிலங்களுக்கு இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை.   உத்தரப்பிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட இடம் ஒதுக்கப்பட்டு மார்ச் 2020- ஆம் ஆண்டு திறக்கப்படலாம் என்று  மாநில அரசால் நம்பிக்கை வெளியிடப்பட்டது. இதில் உத்தரப்பிரதேச எய்ம்ஸ் மருத்துவமனை கோரக்பூரில் முதல்வர் ஆதித்யநாத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலுக்கு முன்பாக அறி விக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் பாஜக தோல்வி யடைந்துவிட்டது. இந்த நிலையில் வெறும் 21 மாதங்களே இருக்கும் நிலையில் அங்கு எய்ம்ஸ் கட்டப்படுவதற்கான அறிகுறிகளே தெரியவில்லை.

மாநில அரசு நிலம் ஒதுக்கியும்

மத்திய அரசின் செயல்பாடு ஏதுமில்லை

இதில் பஞ்சாபில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகுறித்த அறிவிப்புதான் மிகவும்பரிதாபகரமானதாக உள்ளது. இங்கு 1000 கோடி நிதி ஒதுக்கீடு என்று அறிவித்துவிட்டு வெறும் 36 -கோடி மட்டுமே இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த எய்ம்ஸ் மருத்துவமனை பஞ்சாப் தேர்தலுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டதாகும்.  இதில் நகைப்பிற்குரிய தகவல் ஜம்மு காஷ்மீரில் எய்ம்ஸ் அறி விக்கப்பட்டு அதற்கான நிதி ஒரு பைசா கூட ஒதுக்கப் படவில்லை. ஆனால் இடத்தை தேர்ந்தெடுத்து ஓராண்டு முடிந்த நிலையிலும்  ஒரு கட்டடம் கட்டுவதற்கான எந்த ஒரு அடையாளமும் அங்கு தெரியவில்லை.

இதேபோல் மத்தியப்பிரதேசம் -பிலாஸ்பூர், பீகார்,  ஜார்கண்ட், குஜராத் போன்ற மாநிலங்களிலும் இதே நிலைதான். முக்கியமாக பீகாரில் 2015 --2016 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பீகார் எய்ம்ஸ் குறித்து அறிவிப்பு வெளியானது. மாநில அரசும் இடத்தை ஒதுக்கீடு செய்து மத்திய அரசுக்கு அறிவித்துவிட்டது. ஆனால், இன்றளவும் அதற்கான தொகை ஒதுக்கவில்லை.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் தரும் உண்மை!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிவந்த இந்த தகவல்கள் ஒரு உண்மையை வெளிப்படுத்துகின்றன. அதாவது பஞ்சாப் மாநில தேர்தலை ஒட்டியும், கோரக்பூர், பூல்பூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலை ஒட்டியும் இது போன்ற விளம்பர அறிக்கைகள் மோடி அரசால் வெளி யிடப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க தேர்தல் ஆதாயத் திற்காக மட்டுமே இது போன்ற அறிக்கைகளை மோடி பயன்படுத்துகிறார். ஆனாலும், பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச தேர்தல்களில் பாஜக படுதோல்வியை அடைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner