எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

அபுஜா, ஜூலை 2 நைஜீரியாவில், முன்னாள் அதிபர் பதுக்கி வைத்த கருப்புப் பணத்தை, சுவிஸ் வங்கியிலிருந்து மீட்டு, அதை, நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்க, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், 1993 முதல், 1998 வரை, அதிபராக இருந்தவர், அபசா. இவர், திடீர் மாரடைப்பால், 1998 இல் உயிரிழந்தார். தன் பதவிக் காலத்தில், பல ஆயிரம் கோடி ரூபாய் கருப்புப் பணத்தை பதுக்கிய அபசா, அதை, சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கியில், 'டெபாசிட்' செய்தார்.

இந்நிலையில், நைஜீரிய அதிபர், முகம்மது புஹாரி, கருப் புப் பணத்தை மீட்டு, நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்க திட்ட மிட்டுள்ளார். கடந்த, 2015 இல் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போதே, இந்த வாக்குறுதியை அவர் அளித்து இருந்தார். இதற்காக, சுவிஸ் வங்கி அதிகாரிகளுடன், நைஜீரிய அரசு பேச்சு நடத்தியுள்ளது.

உலக வங்கி மேற்பார்வையில், முதல்கட்டமாக, 2,000 கோடி ரூபாய், நைஜீரிய அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதை, அந்நாட்டில் வசிக்கும், மூன்று லட்சம் குடும்பங்களுக்கு, சமமாக பிரித்தளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சுவிட்சர்லாந்தில் பதுக்கி வைக்கப்பட்ட கருப்புப் பணத்தை மீட்டு ஆளுக்கு ரூ.15 லட்சம் தருவேன் என்றார் மோடி. அதை செய்யவில்லை. ஆனால், நைஜீரியா செய்து காட்டியது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner