எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜெய்ப்பூர், ஜூலை 3 பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் இம்மாதத்தில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். கோரிக்கைகளைஏற்றுஇட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றால் மோடியை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாக குஜ்ஜார் வகுப்பினர் எச்சரித்துள் ளார்கள்.

அந்த எச்சரிக்கைக்குப் பணிந்து ராஜஸ்தான் மாநில பாஜக அரசு தற்பொழுது இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட உள்ளதாகத் தகவல்கள் வெளி யாகியுள்ளன.

தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ்  (2.7.2018) வெளியிட்டுள்ள தகவலின்படி, குஜ்ஜார் அரக்ஷன் சங்கர்ஷ் சமிதி அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள்கோரிக்கைகளைவலி யுறுத்தி, அம்மாநில தலைமைச் செயலகத்தில் ராஜஸ்தான் மாநில அமைச்சர்கள் அருண் சதுர்வேதி மற்றும் ராஜேந்திர ரத்தோர் ஆகியோரை சந்தித்து பேசினார்கள்.

அரசுக்கு கெடு விதிப்பு

குஜ்ஜார் வகுப்பின் தலைவர்  ஹிம்மத் சிங் கூறுயதாவது: இடஒதுக்கீடு அளிப்பதற் கானசுற்றறிக்கையை2.7.2018 மாலைக்குள்வெளியிட வேண்டும்என்றுமாநில அரசுக்குக் கெடு விதித்துள் ளோம். சுற்றறிக்கை வெளி யிடப்படவில்லை என்றால், ராஜஸ்தானுக்குவருகைதரும் பிரதமர்மோடியைஎதிர்த்து போராட்டங்களை நடத்து வோம் என்றார்.

உறுதிமொழியை அரசு நிறைவேற்றவில்லை

மற்றொரு பொறுப்பாளர் சைலேந்திர சிங் கூறுகையில், ஏற்கெனவே ஒரு விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதாக அமைச்சர்கள் உறுதி அளித் தார்கள் என்றார்.

உச்சநீதிமன்றம் இடஒதுக் கீட்டின் அளவில் 50 விழுக்காடு உச்சவரம்பு கூறியுள்ளதால், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் குஜ்ஜார் வகுப்பின ருக்கு 5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும்என்று குஜ்ஜார்வகுப்பினர்முக்கியக் கோரிக்கை விடுத்திருந்தார் கள். ஆனால், அவர்கள் கோரிக் கையை அரசு ஏற்கவில்லை. குஜ்ஜார் ஜாதியினர் மற்றும் பிற நான்கு பிற்படுத்தப்பட்ட ஜாதியினரையும் இணைத்து ஒரு விழுக்காடு ஒதுக்கீடு வழங்க 2017 ஆம் ஆண்டு டிசம் பரில் மாநில அரசு உறுதிய ளித்திருந்தது.

இது தொடர்பாக சைலேந்திர சிங் மேலும் கூறுகையில், அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையின்போது  (மே19) 16அம்சங்களைக்கொண்ட ஒப் பந்தம் கையெழுத்தானது. ஆனால், அரசு அதை நடை முறைப்படுத்தவில்லை.  9.12.2016 முதல் 21.12.2017 முடிய அரசுப் பதவிகளுக்கான பணிநியமனங்களில்  மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒரு விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்பதும் அதில் உள்ளடக்க மாக இருந்தது. மேலும், ரோகினி ஆணையம் அமைக் கப்படுவதற்கு முன்பாக இதர பிற்படுத்தப்பட்டவகுப் பினர் குறித்து வகைப்படுத்தி, குஜ்ஜார்களுக்கு இடஒதுக்கீடு வழங்க துணைக்குழு அமைக் கப்பட வேண்டும் என்பதும் ஒப்பந்தத்தின் உள்ளடக்கமாக இருந்தது.

9.12.2016 முதல் 21.12.2017 வரையிலான  அரசுப்பதவிக்கான பணிநியமனங்களிலும் ஒரு விழுக்காடுஇடஒதுக்கீடுவழங்க அரசுஒப்புக்கொண்டது.அதற்கான பணியிடங்களை உருவாக்கிடவும் வேண்டும். இடஒதுக்கீடு கோரி போரா டிய குஜ்ஜார் வகுப்பினர்மீது தொடரப்பட்டஅனைத்துகுற்ற வழக்குகளையும் அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner