எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கேள்வி: தமிழ்நாட்டில் எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டம், மன்சூர் அலிகானுக்கு ஒரு சட்டமா?

பதில்: சட்டம் ஒன்றுதான். அதில் நூலிழை வழியே எஸ்.வி.சேகர்களால் நுழைந்துவிட முடியும். மன்சூர் அலிகான்கள் அதே நூலிழை யிலேயே சிக்கிக் கொள்வார்கள்.

(நக்கீரன்', ஜூன் 30)

என்னே நாசூக்கான' பதில்.

நூலிழை''- புரிகிறதா?

அந்த நூலிழை எஸ்.வி.சேகரின் தோளில் இழையும்  - மன்சூர் அலிகான்கள் தோள்களில் அது கிடையாதே!

எது பயங்கரவாதம்?

கேள்வி: விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளை தீவிரவாத மதக் குழுக் கள் என அமெரிக்க உளவு அமைப்பான சி.அய்.ஏ. கூறியுள்ளதே?

பதில்: தீவிரவாதம் என்றால் கொள்கையில் தீவிரமாக இருப்பது; அது தவறு இல்லை. பயங்கர வாதம்தான் கூடாது. கொலை, கொள்ளை, வெடி குண்டு வைப்பது என்ற நடவடிக்கைகள்தான் பயங் கரவாதம்.

- (விஜயபாரதம், ஆர்.எஸ்.எஸ். வார இதழ், 6.7.2018)

அப்படியா சேதி? பாபர் மசூதியை இடித்த வி.எச்.பி., பஜ்ரங் தள் கைகளில் எல்லாம் பூச்செண்டுகள்தான் இருந்தனவா? இடித்த கைகளில் இருந்தவை என்னென்ன? இன்னொரு மதத்தின் வழிபாட்டுத் தலத்தை இடித்து நொறுக்கியது பயங்கரவாதம் இல்லை என்று சொல்வதைவிட பயங்கர வாதம் வேறு என்ன?

உண்டியல் வசூல் ஏன்?

கேள்வி: திருப்பதி ஏழுமலையான் உண் டியலில் காணிக்கை போட்டால் அவர் பத்து மடங்காக தருவார் என்பது உண்மையா?

பதில்: ஏழுமலையான் வட்டிக் கடை நடத்த வில்லை.

- (விஜயபாரதம், ஆர்.எஸ்.எஸ். வார இதழ், 6.7.2018)

அப்படியா சேதி? ஏழுமலையான் தன் கல்யாணத்துக்காகக் குபேரனிடம் வாங் கிய கடனை அடைப்பதற்காகத்தான் ஏழு மலையான் கோவிலில் உண்டியல் வசூல் என்றால், அர்த்தமுள்ள இந்து மதத்தின் கடவுள் குடும்பத்திலும் வட்டிக்கடை நடப்ப தாகத்தானே பொருள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner