எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூலை 5 -பிரதமர் நரேந்திர மோடி, தனது பிட்னஸ் வீடியோவை அண்மையில் வெளியிட்ட நிலையில், இந்த வீடியோவுக்காக மட்டும் ரூ. 35 லட்சம் செலவிடப்பட்டு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி-யின் சவாலை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி, பிட்னஸ் வீடியோ ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார். அவர் வெளியிட்ட இந்த வீடியோ, சமூகவலைத் தளத்தில் கடும் கிண்டலுக்கும், கேலிக்கும் உள்ளானது. இதுவொரு புறமிருக்க, பிரத மர் மோடி வெளியிட்ட வீடியோவை தயாரிப்பதற்கு ஆன செலவுத் தொகை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், மோடியின் பிட்னஸ் வீடியோ ஒரே நாளில் எடுக்கப்பட்டது இல்லை என்றும், மூன்று நாள் இதற்காக செலவுசெய்யப்பட்டுஇருப்பதும்அம் பலமாகியுள்ளது. எடுக்கப்பட்ட காட்சி களை எடிட் செய்யவே இரண்டு நாள் கள் ஆனதாகவும், எடிட்டிங்கிற்காக பாலி வுட்டின் புகைப்பட கலைஞர் ஒருவர் வரவழைக்கப்பட்டு வீடியோ வேலைகள் முடிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், வீடியோ எடுத்தது, எடிட்டிங் வேலை பார்த்தது என மொத்தம் ரூ. 35 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது ஒரு நாளுக்கு ரூ.12 லட்சம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி மக்களின் வரிப்பணத்தை வாரியிறைத்து தனது பிட்னஸ் வீடியோ தயாரித்து இருக்கிறார்; ரூ. 35 லட்சத்தை வீணடித்து இருக்கிறார் என்று காங்கிரசு குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது. ஆனால் இது மக்கள் பணம் அல்ல; ஸ்பான்சர் மூலம் கிடைத்த பணம்தான் என்று பாஜக பூசி மெழுகியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner