எழுத்துரு அளவு Larger Font Smaller Font

'தி பிரிண்ட்' இணைய ஊடகம் தகவல்

புதுடில்லி, ஜூலை 6 -2019 மக்களவைத் தேர் தலில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு குறை வாக உள்ளதாக, தி பிரிண்ட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் மீண்டும் பாஜக ஆட்சிதான்; எங்களது வெற்றியை யாரும் தடுக்க முடி யாது என்று அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கூறி வரும் நிலையில், அதற்கு எதிரானதான தி பிரிண்ட் இணைய ஊட கத்தின் ஆய்வு அமைந்துள்ளது.

2014 தேர்தலில் வெற்றிபெற்ற 64 தொகு திகளில் மீண்டும் பாஜக வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்றும், எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளும் பட்சத்தில் இந்த எண் ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான நிலவரங்களே உள்ளன என்றும் அது கூறியுள்ளது. காங்கிரசு, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய லோக் தளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் ஓரணியில் திரள்வதற்கான சூழல் அதிகம் இருப்பதால், பாஜக தோல்வி பெறுவதற்கான வாய்ப்புக்களே உள்ளதாகவும் தி பிரிண்ட் தெரிவிக்கிறது.

பாஜக-வுக்கு எதிராக, மகாராஷ்டிரத்தில் காங்கிரசு,தேசியவாத காங்கிரசு இணைந்தது மட்டுமன்றி, வேறு இரு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தமிழ் நாட்டில் காங்கிரசு, - திமுக கூட்டணியும் தொடர்ந்து வருகிறது. கருநாடகத்திலும் இதே நிலைதான் உள்ளது. அங்கு காங் கிரசு - மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்துள்ளன. 2019 தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர் வதற்கான அறிகுறிகளே தெரிகின்றன. டில்லியில் தற்போது ஆம் ஆத்மிக்கு நல்ல மதிப்பு உள்ளது. துணைநிலை ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பும் அந்தக் கட்சிக்கு சாதகமாக மாறியுள்ளது. இங்கு ஆம் ஆத்மியும் காங்கிரசும் சேர்ந் தால், அது நிச்சயமாக பாஜக-வுக்கே பின்ன டைவாக இருக்கும். பீகாரில்நிதிஷ்குமார்பாஜககூட்ட ணி யில் இருந்து கொண்டே, காங்கிரசு கூட்டணிக்குமறைமுகஅழைப்புவிடுத்துக் கொண்டிருக்கிறார். ராஷ்ட்ரிய ஜனதாதளத் துடனும் நட்பு பாராட்டத் தொடங்கியுள்ளார். எனவே, இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, 2019 தேர்தலைச் சந்தித் தால் பாஜக வெற்றிவாய்ப்பு மிகக் குறைவே என்று தி பிரிண்ட்' தனது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner