எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவொற்றியூர், ஜூலை 6 மாதவரம் பகுதியில் நடைபாதைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கோயில் மற்றும் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிர டியாக  இடித்து அகற்றினர்.

சென்னை மாநகராட்சி மாத வரம் மண்டலத்தில் 31 ஆவது வார்டுக்கு உட்பட்ட கே.கே.ஆர் நகரில் 40 அடி சாலையில், மாநகராட்சிக்கு  சொந்தமான இடத்தில்தனியார்கள்ஆக் கிரமித்து, அங்கு விநாயகர் கோயில் மற்றும் கடைகளை கட்டியிருந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு  தெரிவித்து, அந்தஆக்கிரமிப்புகளைஅகற் றக்கோரிசென்னை உயர்நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில் மற்றும் கடைகளை அகற்ற  வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். ஆனால், அப்போது பொறுப்பில்இருந்த மாதவரம் நகராட்சி, பல்வேறு காரணங்களால் இத்தீர்ப்பை  செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்தது. இதை யடுத்துஉயர்நீதிமன்றதீர்ப் பின்படி, மீண்டும் ஆக்கிர மிப்பைஉடனடியாகஅகற்ற கோரி  மாதவரம் மண்டல மாநக ராட்சி உதவி ஆணையரிடம் குடியிருப்போர் நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில்,மண்டல அதிகாரி விஜயகுமார் தலைமை யில்,செயற்பொறியாளர் ராம மூர்த்தி, உதவி செயற்பொறி யாளர்சதீஷ்மற்றும்மாநக ராட்சி  ஊழியர்கள் நேற்றுமுன் தினம் காலை 11 மணிக்கு கேகேஆர் கார்டன் பகுதிக்கு காவல்துறையினர் மற்றும் 2 பொக்லைன் இயந்திரங்களுடன் விரைந்து ஆக்கிரமித்து  கட்டி யிருந்த விநாயகர் கோயில் மற் றும் கடைகளை இடித்து அகற் றினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner