எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நீதிபதிகள் சரமாரி கேள்வி

மதுரை, ஜூலை 7- நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் மொழி பெயர்ப்பில் அதிகக் குளறுபடி இருந்ததால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வினாக்களுக்கு கூடுதலாக மதிப்பெண்கள் வழங்க வேண் டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை வெள்ளியன்று விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் மொழி பெயர்ப்பில் அதிகக்குளறுபடி இருந்ததால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 49 வினாக்களுக்கு நான்கு மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்கவேண்டும் எனக் கோரி டி.கே.ரங்கராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் செல்வம், பசீர் அகமது ஆகியோர் கொண்ட அமர்வில் நடை பெற்று வருகிறது. வெள்ளியன்று நடைபெற்ற விசாரணையில் சிபிஎஸ்இ சார்பாக வழக்குரைஞர் ஆஜரானார். அவர் வாதிடுகையில் இந்த வழக்கை பாதிக் கப்பட்ட மாணவர்கள் சார்பாக யாரும் தொடரவில்லை; பொது நலன் வழக்காக மட் டுமே தொடரப்பட்டுள்ளது என்றார். அப்போது நீதிபதிகள், நீங்கள் தவறாகக் கேள்வி கேட்பீர்கள்; பின்னர் அது சரியென்று கூறுவீர்களா? சிபிஎஸ்இ சர்வாதிகாரப் போக் கைக் கடைப்பிடித்து வருகிறதா? தவறான கருத்துக்களை சரியாக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் கடுமையாக கண்டித்தனர். இராகத்திற்கு நகம் என்றும், இடைநிலை என்பதற்குப் பதி லாக கடைநிலை என் றும் இரத்த நாளங்கள் என்பதற்குப் பதி லாக இரத்தம் நலன் என்றும் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருப்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது.

பீகார் மாநிலத்தில், தேர்வு எழுதியவர்களை விட தேர்ச்சி பெற்றவர்கள் அதி கரித்துள்ளது எப்படி? கருணை மதிப் பெண் கேட்டு வழக் குத் தொடர்ந்த உடன் அவசர அவசரமாக தர வரிசைப் பட்டியல் வெளியிட்டது ஏன்? சிபி எஸ்இ தேர்வாணையம் தவறு செய்தது தெளி வாகத் தெரிகிறது. இப்படி தவறான கேள்விகள் இருக்கும்போது எப்படி சரியான பதிலை எதிர்பார்ப்பீர்கள்? இதனால் தமிழக மாணவர்கள் வாழ்நாள் கனவு தகர்ந்து போகதா? மாணவர்கள் நலன் கருதி சிபிஎஸ்இ செயல்பட வேண்டும் என்று சரமாரியாக கேள்வி எழுப்பியும், கண் டித்தும் பேசிய நீதிபதிகள், மொழி மாற்றம் எவ்வாறு செய்தீர்கள்; எந்த டிக்ஸ்னரி (அகராதி) பயன்படுத்தப்பட்டது என்றும் கேள்வியெழுப் பினர்.தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner