எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடந்தையில் நடைபெற்ற திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டுக்காகத் தமிழகம் தழுவிய அளவில் திராவிட மாணவர் கழகத்தினர், கழகத் தோழர்களின் ஒத்துழைப்புடன் நிதி திரட்டினர். மாநாட்டுக் குழு சார்பாக கழகத்திற்குக் கழகத் தலைவரிடம் ரூ.3,96,780 பலத்த கர ஒலிக்கிடையே அளிக்கப்பட்டது. நான்கு லட்சம் ரூபாய்க்கு இன்னும் கொஞ்சம் நிதி குறைந்தது. அதனை அளிக்க தோழர்கள் முன் வந்தால் கழகத் தலைவரிடம் ரூ.4 லட்சமாக அளித்து விடலாம் என்று கழகத்தின் மாநில அமைப்பாளர் தோழர் உரத்தநாடு இரா. குணசேகரன் அறிவிக்க, குடந்தை மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவர் தாராசுரம் வை. இளங்கோவன் அந்தத் தொகையை அளிக்க முன் வந்தார்  என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கழகத் தலைவரிடம் நிதி வழங்கியோர்:  திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார்,  துணைச் செயலாளர்: ச. அஜிதன், ஆ. பிரபாகரன், நா. பார்த்திபன், தி. இலக்கியா, த. யாழ்திலீபன். மாநில கூட்டுச் செயலாளர் சே.மெ. மதிவதனி,  மாநில அமைப்பாளர்: இரா. செந்தூரபாண்டியன், உரத்தநாடு இரா. குணசேகரன், தஞ்சை கி. சவுந்தரராஜன், செ.  தமிழ்ச்செல்வன், ம. திராவிட எழில் உள்ளிட்டோர் (குடந்தை, 8.7.2018).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner