எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூலை 12  ட்விட்டர் சமூகவலைத் தளத்தில் பிரதமர் மோடியை பின்தொடரும் ஒரு கோடி கணக்குகள் போலி யானவை என்பது தெரிய வந்துள்ளது.

முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைத் தளங்களில் பொய்யான கணக்கு வைத்திருப்போரின் எண்ணிக்கை அதி கரித்துக்கொண்டே வந்தது. இந்த போலியான சமூகவலைத்தள பக்கங்களிலிருந்து தவறான தகவல்களும், வதந்திகளும் பெருமளவில் பரப்பப்பட்டு வந்தன. இதனால், தவறான செய்திகள் மற்றும் வதந்திகள் பரப்பும் போலிக் கணக்குகளை கண்டறிந்து, அந்த கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் தற்போது முடக்கி வருகிறது.

இதில் முதல் அடி பிரதமர் நரேந்திர மோடிக்குத்தான் கிடைத்துள்ளது. ட்விட்டரில் அதிகமாக பின்பற்றப்படும் மூன்றாவது அரசியல் தலைவர் இந்தியப் பிரதமர் மோடிதான் என்று கூறப்பட்டு வந்தது. அவரை 4 கோடியே 30 லட்சம் பேர் பின்தொடர்ந்து வந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், போலிகளை கண்டறிந்து நீக்கும் ட்விட்டரின் அதிரடியான நடவடிக்கையால், பிரதமர் மோடியை ட்விட்டரில் பின்தொடரும் ஒரு கோடிகணக்குகள் போலி என்பது அம்பலமாகி இருக்கிறது. இதனால் ஒரேயடியாக மோடியை பின்பற்றுவோரில் ஒரு கோடி பேரின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner