எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, ஜூலை 12 உத்தரப் பிரதேச மாநிலத்தின் சிறை ஒன்றில் பஜ்ரங்கி என்ற குற்றவாளி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு என்பது இல்லாத நிலையில் உள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உத்தரப்பிர தேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இன்றுள்ள உத்தரப் பிரதேச அரசாங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளது. பீதியை ஏற்படுத்தும் சூழ்நிலைதான் உள்ளது. சிறைக்குச் செல் லும்குற்றவாளிகளுக்கு அங்கு யாராவது நம்மைக் கொல்லக் கூடும் என்ற எண்ணம் உருவாகிவிட்டது. இது அரசாங்கத்தின் தோல்வி. மாநில மக்கள் மிகவும் பயந்துபோய் உள்ளனர். மாநிலத்தில் இதற்கு முன்பு வரை இத்தகைய தவறான மற்றும் குழப்பமான ஒரு நிலை இருந்ததில்லை.''

இவ்வாறு அகிலேஷ் தெரி வித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் பாக்பத் மாவட்ட சிறை வளாகத்தில் கடந்த திங்களன்று முன்னா பஜ்ரங்கி என்ற விசாரணைக் கைதி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் சிறை மேற்பார்வையாளர், துணை சிறைகாவல்அதிகாரி, தலை மைக்காவலர்ஆகியோர்பணி யிடை நீக்கம்  செய்யப்பட்டுள் ளனர்.

சுட்டுக்கொலை செய்யப் பட்ட பஜ்ரங்கியின் வழக்குரை ஞர் விகாஸ் சிறீவஸ்தவா, பஜ்ரங்கியின்உயிருக்குஆபத் துள்ளது குறித்து உத்தரப்பிர தேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்துக்கு முன்பே தெரியும் என்று கூறியுள்ளார்.

மேலும், பஜ்ரங்கியின் மனைவி சீமா சிங், அவரது கணவர் மாநில காவல்துறையின் என்கவுண்ட்டர் பட்டியலில் இருந்துள்ளதாகக் குற்றம் சாட் டியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner