எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுவிலக்கு

மதுவிலக்கு செயல்பாட் டுக்கு வந்த பிகாரில் மக்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற் றங்கள், மக்கள் மத்தியில் புதியசிந்தனைக்கும்,வாழ்வியலுக்குமான ராஜபாட்டை யாகும்.

பிகார் மாநில தலைநகர மான பாட்னாவில் இயங்கி வரும் மேனஜ்மென்ட் இன்ஸ் டிடியூட் என்ற நிறுவனம் கள ஆய்வு நடத்தி சில அரிய தேவையான தகவல்களைத் தரணிக்குத் தந்துள்ளது.

தேன் வாங்குவோர் 300 விழுக்காடு; பன்னீர் என்ற காட் டேஜ்பாலாடைக்கட்டி 200 விழுக்காடு; பால் 28 விழுக்காடு; தயிர் 19 விழுக்காடு; லஸ்ஸி 20 விழுக்காடு விற்பனையில் அதிகரித்துள்ளதாம்.

வங்கிக் கடன் வாங்கு வோர் எண்ணிக்கை 30 விழுக் காடு அதிகரிப்பு; டிராக்டர் வாங்குவதில் 29 விழுக்காடு; இரு சக்கர வாகனம் வாங்கு வதில் 32 விழுக்காடு; ரெடிமேடு ஆடைகள் வாங்குவோர் 46 விழுக்காடு அதிகரித்துள்ளது.

மது விலக்கு செயல்பாட் டுக்கு வருமுன் ஆண்டு ஒன்றுக்கு 5,280 கோடி ரூபாயை மதுவிற்காக மக்கள் கொட்டியழுதனர். மதுவிலக்கு வந்த பின் வீட்டுக்குத் தேவை யான பொருள்களை வாங்க ஆரம்பித்தனர்.

மற்றுமொரு மறுமலர்ச்சி செய்தி - தேனைக் குழைத்துத் தரும் தகவல் என்ன தெரியுமா?

ஆள் கடத்தல் 67 விழுக்காடு; கொலைகள் 28 விழுக்காடு; கொள்ளைகள் 23 விழுக்காடு - மதுவிலக்குக்குப் பின் குறைந்துள்ளதாம்.

இந்த அரிய தகவல்களுக் குப்பின் எந்த மாநிலமாவது, எந்தவிதத்திலாவது மது விலக்கைக் கொண்டுவரத் தவறுமானால், அது மக்கள் நல அரசாக இருக்க முடியாது. மக்களின் உயிரை ஒரு பொருட்டாக மதிக்காது, சமூ கத்தின் அமைதியையும், செழிப்பையும் காலில் போட்டு மிதித்து, மக்களின் பணத்தை மட்டுமே குறி வைத்துச் சுரண்டும், மக்களுக்குச் சவப் பெட்டி தயாரிக்கும் ஒரு நிறுவனமாகத்தான் இருக்க முடியும். (ஆண்டு ஒன்றுக்கு தமிழக அரசுக்கு வருமானம் ரூ.23,000 கோடியாம்).

டாஸ்மாக் விற்பனையில் இந்தியாவிலேயே மதுரை மண்டலம் இரண்டாம் இடத் திலாம். 6825 டாஸ்மாக் கடைகளும், 4435 மதுபான கடைகளும் தமிழ்நாட்டில் இருக்கின்றன என்றால், இவை பெருமைக்குரியவைதானா?

இதன் பொருள் என்ன? இந்தியாவிலேயே தமிழ்நாடு கெட்டுக்குட்டிச்சுவராகிவிட் டது என்றுதானே கருத வேண்டும்.

ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி உரிமை பெற்று, உத்தியோகப் படிக்கட்டுகளில் ஏறி மேனி லைக்குவரவேண்டும்என் பதற்காக அயராது பாடுபட் டதை எல்லாம் இந்த மதுக் கொடூரம் தலைக்குப்புறத் தள்ளி தரைமட்டமாக்குகிறதே!

குடும்பங்களில் அமைதி யின்மை, சண்டை சச்சரவுகள், கடன் தொல்லை- சிந்தனை முடக்கம் இவற்றின் உற்பத்திக் கூடமாக மது இருக்கிறதே!

மதியைத் துலக்குவோம் - மதுவை விலக்குவோம்! குடந்தைமாநாட்டில் கழக மாணவர்கள் எடுத்த சூளுரை களில் இதுவும் ஒன்றே!

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner