எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்துத்துவாவை வளர்க்கும் மகாராட்டிர அரசின் மறைமுக திட்டம்

மும்பை, ஜூலை 14 மகாராட்டிரத்தில் அரசு உதவி பெறும் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இந்தி மற்றும் மராட்டி மொழியில் பகவத் கீதை தரப்பட உள்ள தாக சுற்றறிக்கை ஒன்று வெளியானது. இதுகுறித்து அரசு தரப்பில் மத நூல்களைத் தருவது தவறு ஒன்றுமில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தனியார் அமைப்புதான் கொடுத்தது; இது அரசின் முடிவல்ல என்றும் விளக்கம் கொடுத் துள்ளது.    அனைத்து அரசு உதவி பெறும் கல் லூரி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பகவத் கீதை அளிக்க இருப்பதாகவும், அதைப்பெற்றுக்கொள்ளவிரும்பும் கல்லூரிகள் மும்பையில் உள்ள உயர் கல்வி இயக்குநகரகத்திற்கு வந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சுற்றறிக்கை விடப்பட்டிருந்தது.

மதச்சார்பற்ற நாட்டில் மாணவர்களுக்கு குறிப்பிட்ட மதம் சார்ந்த நூல் கொடுப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஒன் றாகும், இவ்விவகாரம் மகாராட்டிர அரசிய லில் பிரச்சினையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மகாராட்டிராவின் கல்வி அமைச்சர் வினோத் தவ்டே கூறியதாவது:

அந்த சுற்றறிக்கையினை நாங்கள் யாருக்கும் வழங்கவில்லை. கல்லூரிகளில் பகவத் கீதையினை தருவது குறித்து எந்த விதமான முடிவினையும் நாங்கள் எடுக்க வில்லை'' என்று கூறினார்.

பக்தி வேதந்தா புத்தக நிறுவனம் தானாக முன்வந்து கல்லூரிகளுக்கு பகவத் கீதையினை வழங்கியிருக்கிறது'' என்று கூறினார். சில நாள்களுக்கு முன்பு அந்த நிறுவனம் அரசாங்கத்திடம், பகவத் கீதை யினை கல்லூரிகளுக்குத் தர இயலுமா'' என்று வினவினார்கள்.

அரசினால் அப்படி எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இய லாது என்று கூறி மறுத்துவிட்டோம். அவர்கள் விரும்பினால் அவர்களின் நிறுவனத்தின் பெயரிலேயே அதனை கல்லூரிகளில் கொண்டு சேர்க்கலாம் என்று கூறியதால், அவர்கள் இந்த முயற்சியினை மேற்கொண்டனர். பைபிள், அல்லது குரானை கொண்டு போய் கல்லூரியில் தருகிறோம் என்று யாராவது சொன்னாலும் எங்களால் மறுப்பேதும் கூற இயலாது'' என்றும் குறிப்பிட்டார்.

மும்பை உயர்கல்வி மய்யத்தின் அதி காரி ஒருவர் கூறுகையில், பக்தி வேதந்தா புத்தக நிறுவனம் பகவத் கீதையினை மாணவர்களுக்கும், கல்லூரிகளுக்கும் தர விரும்புவதாக கூறி யிருக்கிறது. மாநில அரசு அவர்களிடம் கல்லூரிகளின் பட்டியலை சமர்ப்பித்தி ருக்கிறது. கல்லூரிகளுக்கு அனுப்பப்பட வேண்டிய அனைத்து பகவத் கீதைகளும் இந்த அலுவலகத்தில் தான் இருக்கிறது'' என்று கூறியிருக்கிறார்.

இவ்விவகாரம் தொடர்பாக மகாராட்டிர காங்கிரசு கட்சி இந்த அரசு இந்துத்துவாவை மாணவர்களிடம்  திணிக்கப் பார்க்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன் விகே பாட்டில் இந்த நடவடிக்கைகள் பற்றி சரியான விளக்கம் அளிக்குமாறு கேட்டுள்ளார்.  மகாராட்டிராவின் முன்னாள் முதல மைச்சர் பிரித்விராஜ் சவுகான் கூறும்போது,

நம்முடையஅரசமைப்புச்சட் டம்மதச்சார்பற்ற தன்மையையேஅதிகம் விரும்புகிறது. ஆனால், இந்த நடவடிக்  கையால் இந்துத்துவக் கொள்கையை கல்வி நிறுவனங்களுக்குள் நுழைய அனு மதித்திருக்கிறது'' என்று கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner