எழுத்துரு அளவு Larger Font Smaller Font

செங்குன்றம், ஜூலை 14 செங்குன் றம் அருகே முருகன் கோயிலில் 2 கோடி மதிப்பிலான மரகத சிலை மற்றும் தங்க வேல் ஆகியவை கொள்ளை போயின. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.

செங்குன்றம் அடுத்த அல மாதி கிராமத்தில் முருகன் கோயில் ஒன்று உள்ளது. இங்கு காலை, மாலை வேளைகளில் பூஜைகள் நடைபெறும்.

ஓய்வு பெற்ற அய்ஏஎஸ் அதிகாரி சிவக்குமார் என்பவர் கோயிலை பராமரித்து வருகிறார். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயிலில் மூலவர் சிலையின் கால் பகுதிக்கு அருகில் 2 கோடி மதிப்பிலான ஒரு அடி உயரம் உள்ள மரகத முருகன்  சிலை, அதன் கையில் தங்க வேல் ஒன்று இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அமா வாசை சிறப்பு வழிபாடு முடிந் ததும் கோயிலை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை 7 மணியளவில் வழக்கம்போல் கோயிலில் பூஜைகள் நடத்தப் பட்டன.

பக்தர்கள் அனைவரும் தரி சனம் செய்துவிட்டு, கலைந்து சென்றனர். காலை 8 மணிக்கு சிவகுமார் வந்து பார்த்தபோது, கோயிலில் இருந்த மரகத முருகன் சிலை, தங்க வேல் ஆகியவை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  இதுகுறித்து சோழவரம் காவல் நிலையத்தில் சிவகுமார் புகார் செய்தார். காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துவிசாரித்தனர்.தகவ லறிந்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சிபிசக் கரவர்த்தி, பொன்னேரி மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராஜா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, விசாரணை மேற் கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner