எழுத்துரு அளவு Larger Font Smaller Font

4 ஆண்டு கால ஆட்சியில் 2,920 கலவரங்கள்; 389 பேர் பலி - 8890 பேர் படுகாயம்

புதுடில்லி, ஜூலை 16 -பாஜ.க.வின் கடந்த 4 ஆண்டு ஆட்சியில் நடந்த வகுப்புக் கலவரங்களில் 389 பேர் பலியானதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விபரத்தில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. இப்போது, 4 ஆண்டுகள் முடிந்துள்ளது. இது பற்றி மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கடந்த 2 ஆம் தேதி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், கடந்த நான்கு ஆண்டுகளில் நாட்டில் பெரிய வகுப்பு கலவரங்கள் ஏதும் நடக்கவில்லை என கூறியுள்ளார்.

ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் இதற்கு நேர்மாறான அதிர்ச்சி தகவல் இடம்பெற்றுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விபரத்தில். கடந்த 2017ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம் பாடூரியா, 2017 ஆம் ஆண்டு மேற்குவங்க மாநிலம் ஹாஜி நகர், 2014 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் சஹரான்பூர் ஆகிய மூன்று இடங்களில் பெரிய அளவிலான வகுப்பு கலவரங்கள் நடந்துள்ளன.

2015 ஆம் ஆண்டு பெரிய அளவில் வகுப்பு கலவரங்கள் நடக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. அதேபோல், வகுப்பு கலவரங்களில்  5 பேருக்கு மேல் பலி, 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த சம்பவங்கள் மட்டுமே பெரிய வகுப்புக் கலவர பட்டியலில் உள்ளது. ஒருவர் பலி, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் என்றால், அவை தீவிரமாக கண்காணிக்க வேண்டிய சம்பவங்களாகப் பார்க்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்குவந்த பிறகு, 2017 ஆம் ஆண்டு டிசம்பர் வரை நாட்டில் 2,920 வகுப்பு கலவரங்கள் நடந்துள்ளன. இதில், 389 பேர் பலியாகி உள்ளனர்; 8,890 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner