எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் சார்பில் பேராசிரியர் முருகானந்தம், ஆங்கிலத் துறை, திருவள்ளுவர் கல்லூரி, கள்ளக்குறிச்சி, தன்னார்வலர் கோமதி இணைந்து நடத்திய பெரியார் இன்றும் என்றும்...'

பெரியார் இன்றும் என்றும் என்ற தலைப்பில் விடியல் வெளியிட்ட அந்த பெரிய புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் அனைத்தையும் சில பெண்கள் சேர்ந்து ஆடியோ புத்தகமாக தயார் செய்திருக்கிறார்கள். குறிப்பாக பார்வையற்றோர் பயன்பாட்டிற்காக.

மொத்தம் 86 மணி நேரம் ஓடக்கூடிய பதிவுகள் ..

சென்னையில் எத்திராஜ் கல்லூரியில் 14.7.2018 அன்று நடைபெற்ற விழாவில் அதை வெளியிட்டிருக்கிறார்கள்.

கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் அரங்க.மல்லிகா அவர்களின் துணையோடு நடைபெற்ற விழாவில், கல்லூரி யின் பேராசிரியர்கள், மாணவிகள் என அரங்கம் நிறைந்த விழா.

சத்தமேயில்லாமல், விளம்பரமேயில்லாமல் மிகப்பெரிய பணியை செய்திருக்கிறார்கள் .

பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவை மற்றும் தன்னார்வலர் கோமதி ஆகியோர் இணைந்து இந்த பணியினை செய்து முடித்திருக்கிறார்கள்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner