எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காங்கிரசு தலைவர் ராகுல்

புதுடில்லி, ஜூலை 17 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை வரும் மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய வேண்டுமென காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி,  மோடி யிடம் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக, ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

உங்களின்பெரும்பாலானபொதுக் கூட்டங்களில்,பெண்களுக்குஅதிகாரம் வழங்குவதில் உள்ள ஆர்வத்தைபற்றியும், பொது வாழ்வில் பெண்களை ஈடுபடுத்து வது  இன்னும் அர்த்தமுள்ளதாக இருக்கு மென்றும் கூறுகிறீர்கள். அப்படிப்பட்ட நீங்கள், உங்களின் உறுதிப்பாட்டை காண் பிக்க, வரும் நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத் தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வருவதைவிட வேறு எது சிறந்த வழியாக இருக்க முடியும்?

வெகுவிரைவில் சட்டமன்ற தேர்தல் களும், மக்களவை தேர்தலும் நடக்க உள்ளதால், மகளிர் இடஒதுக்கீடு மசோ தாவை நிறைவேற்றுவதற்கு இதைவிட  சரியான நேரம் எதுவுமில்லை. இந்த மசோதா கொண்டு வரும்பட்சத்தில், காங்கிரசு நிபந்தனையற்ற ஆதரவு அளிக் கும் என்பதை கூறிக் கொள்கிறேன். இந்த விஷயத்தில்  அரசியலைத் தாண்டி நாம் ஒன்றிணைந்து மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டதை நாட்டு மக்களுக்கு உணர்த்துவோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் பெண் களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கூடிய மகளிர் இடஒதுக்கீடு மசோதா கடந்த 2010 ஆம் ஆண்டு  மாநிலங்களவையில் நிறைவேற்றப் பட்டது. ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக மக்களவையில் இது நிலு வையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner