எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கவுகாத்தி, ஜூலை 17 வடகிழக்கு மாநிலங் களில் ஒன்றான அசாம் மாநிலத்தில் பேய், பிசாசு, பில்லி, சூனியத்தில் மக்களுக்கு உள்ள மூடநம்பிக்கை அதிகமாக உள்ளது. சூனியம் வைத்து பலர் கொல்லப்படு வதாகவும், சூனியம் வைத்து கொன் றதாக சில மந்திரவாதிகளை உள்ளூர் மக்கள் அடித்தும், எரித்துக் கொல்வதும் நாளுக்குநாள் அதிகரித்துகொண்டே வந் தது.

202 வழக்குகள்

இதன் விளைவாக கடந்த 2001--2017- ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 114 பெண்களும், 79 ஆண்களும் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை சம் பவங்கள் தொடர்பாக 202 வழக்குகளை அம்மாநில காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், பேய், பிசாசு, பில்லி, சூனியம் தொடர்பாக  மந்திரவாதிகளின் செயல்களுக்கும், இது சம்பந்தமான கொலைகளுக்கும் அதிகபட்சமாக 7 ஆண்டு சிறைத் தண்டனையுடன் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் சட்ட மசோதா 13.-8-.2015 அன்று அசாம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இணைய தளத்தில்...

இந்த மசோதா ஆளுநர்மூலம் குடி யரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மூன்றாண்டுகளாக கிடப்பில் இருந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் கடந்த 13.-6-.2018 அன்று ஒப்புதல் அளித்துள்ளதாக குடியரசுத் தலை வர் மாளிகையின் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner