எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வார விடுப்பு

காவல்துறையில் பணியாற்றுவோருக்கு வாரம் ஒரு நாள் விடுப்பு அளியுங்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

(வரவேற்க வேண்டிய ஒன்றே!)

வேதனை

கீழ்பென்னாத்தூர் அடுத்த சோபள்ளம் கிராமத்தில் கிணற்றில் தூர் வாரும்போது கிரேன்' கயிறு அறுந்து விழுந்து இருவர் பலியாயினர்.

(எதையும் விழிப்புடன் செய்யவேண்டாமா?)

அர்ச்சனையா?

அரசுமீது தேவையற்ற குற்றச்சாற்றுகளை வைப்பது மத்திய பி.ஜே.பி. அரசுக்கு வாடிக்கையாகப் போய்விட்டது; அ.தி.மு.க.வினர் கிளர்ந்தெழுந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும்.

- அமைச்சர் ஜெயக்குமார்

(விளைவு யாருக்கு மோசமாக இருக்குமாம்?)

தினமலரின் சரடு!

ஒரே நாடு; ஒரே தேர்தல் ரஜினி திடீர் ஆதரவு!

- தினமலர்' செய்தி

(லோக்சபா, சட்டசபை என இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது நல்ல விஷயம் என்றுதான் சொல்லியிருக்கிறார்  ரஜினி. தினமலர்' வெளியிட்ட செய்திக்குள் ஒரே நாடு; ஒரே தேர்தல் என்று ரஜினி சொன்னதாக இடம்பெறவில்லையே! பி.ஜே.பி.யின் தூண்டிலை தினமலர்' போட்டுப் பார்க்கிறதோ!)

எச்சரிக்கை!

மேட்டூர் காவிரி கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

(கருநாடகத்தில் மழை அதிகம் பெய்தால், வடிகாலாகப் பயன்படுவது தமிழ்நாடுதானே - அதனால்தான் எச்சரிக்கை!)

முதலைக் கண்ணீர்

விவசாயிகளுக்காக எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன.

- பிரதமர் மோடி

(எந்த ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித் துள்ளன என்பதைத் தெரிந்துகொண்டால், அது  முதலைக் கண் ணீரா, நிஜக்கண்ணீரா என்பது தெரியும்!)

உடைப்பு

நீலாங்கரையடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் ஆறாவது முறையாக கோவில் உண்டியல் உடைப்பு.

(சாதனைப் பிள்ளையார் என்று பட்டம் சூட்டிவிட வேண்டியது தானே!)

ஒழியுமாம்!

தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி மலர்ந்தால்தான் டாஸ்மாக் ஒழியும்.

- மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன்

(பா.ஜ.க.  ஆளும் மாநிலத்தில் எல்லாம் இது ஒழிந்துவிட்டதோ!)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner