எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மோடியின் நடவடிக்கைகளே இந்தியாவை அழித்துவிடும் பாக். உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் கட்டுரையில் தகவல்

புதுடில்லி, ஜூலை 18 இந்தியா விற்கு எதிரான நாசகர காரி யங்களில், பிரதமர் மோடியே பாதியைசெய்து விடுவதால், மோடியே தொடர்ந்து பிரதமராக இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் உளவு அமைப்பான அய்எஸ்அய்-யில் இருப்பவர்கள் விரும்புவதாக ஆச்சரியகரமான செய்தி வெளியாகியுள்ளது. இந்திய உளவு அமைப்பான ராவின் முன்னாள் தலைவர் துலத்தும்,பாகிஸ்தான் உளவு அமைப்பான அய்எஸ்அய்-யின் முன்னாள் தலைவர் ஆசாத் துரானியும்இணைந்து,ஸ்பை கிரானிக்கல்ஸ்என்றதலைப் பில் நூல்ஒன்றை வெளியிட்டுள் ளனர்.

காஷ்மீர் பிரச்சினை, கார்க் கில் யுத்தம், பின்லேடன் படு கொலை, குல்தீப் ஜாதவ் கைது, ஹபீஸ் சயீது, புர்கான் வானி படுகொலை என இந்தியா- பாகிஸ்தான் இடையே நீடிக்கும் பிரச்சினைகள் பற்றியும், இப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகள் குறித்தும் இந்த நூலில் அவர்கள் கட்டுரைகள் எழுதியுள்ளனர். இதில், அய்எஸ்அய்முன்னாள்தலை வர் ஆசாத் துரானிஎழுதியுள்ள கட்டுரையில், இந்தியப் பிரத மராக மோடி இருக்கவேண்டும்; அப்போதுதான் தங்களின் வேலை எளிதாக இருக்கும் என்று அய்எஸ்அய் உளவாளி களே கருதுவதாக கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். அவர்இது தொடர்பாக மேலும் கூறியிருப்ப தாவது:

இந்தியப் பிரதமர் மோடி சிக்கலான நபர். கடுமையான முடிவுகளை எடுக்கக் கூடியவர். அப்படிப்பட்ட ஒருவர் இந்திய பிரதமராக இருப்பதுதான் பாகிஸ்தானுக்கு நல்லது; என்று அய்எஸ்அய்-யில் இருப்பவர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் இந்தியாவை அழிப்பதற்கு வெளிநபர்கள்யாரும் தேவை யில்லை. மோடியின் நடவடிக் கைகளே இந்தியாவைஅழித்து விடும். இந்தியாவின்இமேஜை யும், உள்நாட்டு சமநிலையையும் மோடி அழித்து விடுவார்.இது பாகிஸ்தானுக்கு நன்மை யாக அமையும். எனவே, அய்எஸ்அய்-க்கு ஏற்றபிரதமர் என்று நரேந்திர மோடி விரும்பப்படுகிறார். இதுபற்றி 1998-ஆம் ஆண்டே நான் குறிப் பிட்டேன். இந்தியாவில்பாஜகஆட் சிக்குவந்தால்பாகிஸ்தான் கவலைப்பட வேண்டிய தில்லை. இஸ்லாமியர்களை வெறித்தனமாக எதிர்க்கக் கூடிய ஒருவர் இந்தியாவில் ஆட்சியில் இருப்பது, பாகிஸ்தானுக்கு கெட்ட விஷயம் கிடையாது; பாஜக-வினர் பாகிஸ்தானுக்கு நன்மையையே செய்வார்கள் என்று அப்போது கூறினேன். அதுதான் தற்போதும் நடந்து கொண்டிருக்கிறது என்று ஆசாத் துரானி கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner