எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ராஞ்சி, ஜூலை 18- ஜார்க்கண்ட்டில், சமூகஆர்வலர் அக்னி வேஷ் மீது பாஜக தொண் டர்கள் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாய மடைந்தசுவாமி அக்னிவேஷ் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அரியானா மாநில முன்னாள் எம்எல்ஏ-வான அக்னிவேஷ், இந்துத்துவா அரசியலுக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்தார்.மாட்டிறைச்சி விஷயத்திலும் இந்துத்துவாகும்பலுக்கு எதி ரான நிலைபாட்டைக் கொண் டிருந்தார்.

இந்நிலையில்,அவர்பாஜ கவுக்கு எதிராக ஜார்க்கண்ட் மாநில பழங்குடி மக்களை தூண்டிவிடுவதாககூறி பாஜக-வினர்இந்ததாக்குதலை நடத்தியுள்ளனர்.ஜார்க்கண்ட் டில் அக்னிவேஷ் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரு கிறார்.இந்நிலையில், பாகுர் என்ற இடத்தில் அவருக்கு பாஜக தொண்டர்கள் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியுள்ளனர். பின்னர் ஒருகட்டத்தில் அக்னிவேஷ் மீது சரமாரியான தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அக்னி வேஷ், தன்னை கொலை செய்யும் நோக்கத்தில்தான் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ள தாகவும் கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner