எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பொதுத் துறை வங்கிகள் நெருக் கடியை சமாளிக்க மத்திய அரசுரூ.10 ஆயிரம் கோடி நிதி உதவி.

(ஒரு நீரவ் மோடி அடித்த கொள் ளைக்கு இந்நிதி எம்மாத்திரம்?)

சிவகங்கை மாவட்டம் திருவேலங் குடியில்அரசுஉறுதியளித்தபடிபள்ளி யைத் துவங்காததால் 73 மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்புவதில்லை என்று கிராமத்தினர் முடிவு.

(பள்ளி மூடுவிழா நடத்தும் மாநில அரசுக்கு வசதியாகி விட்டது.)

திருப்பதி கோவிலை 8 நாள்களுக்கு மூடும் முடிவைக் கைவிட்டது தேவஸ் தானம்.

(எட்டு நாள் சுரண்டல் போய் விடாதா?)

மாநகராட்சி இடம் ஆக்கிரமிப்பு விவகாரம் - அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்.

(அந்த ஆக்கிரமிப்பில் ஏராளமான கோவில்களும் உண்டே - அதுபற்றியும் விசாரணையில் இடம்பெறுமா?)

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயற்சி.

(இதில் என்ன ஆச்சரியம்! நடப் பது கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சி தானே!)

அனைத்து மாவட்டங்களிலும் 2 மாதத்தில் நடமாடும் நூலகங்கள் - அமைச்சர் செங்கோட்டையன் அறி விப்பு.

(மகிழ்ச்சி. அண்ணா பெயரில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை அண்ணா பெயரைக் கட்சியில் வைத்திருக்கும் ஆட்சி சிதிலம் அடையாமல் காப்பாற்றுமா?)

சி.பி.எஸ்.இ. நடத்திய நீட் தேர்வு - உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு.

(49 தவறான கேள்விகள் நியாய மானவைதான் என்று உச்சநீதிமன்றம் சொல்லும் என்று எதிர்ப்பார்ப்பா?)

அன்னை தெரசா தொடங்கிய குழந் தைகள் காப்பகங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும் - மத்திய அமைச் சர் மேனகா காந்தி.

(அன்னை தெரசாவுக்கு நோபல் பரிசு என்பது கிறித்துவ சதி என்று சொன்ன கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆட்சியில் இருக்கும்போது ஆய்வுகள்' நடக்கத்தானே செய்யும்!)

மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் - எதிர்க்கட்சிகள் முடிவு.

(மத்திய ஆட்சி - மக்கள் நம்பிக் கையை இழந்து வெகுகாலமாகி விட் டதே!)

சமூக ஆர்வலர் அக்னிவேஷ் மீது பி.ஜே.பி.யினர் தாக்குதல்.

(இந்து மதக் கடவுள்களே சண்டை போட்டனர்; கழுத்தை வெட்டினர் என்றால், அந்த இந்து ராஜ்ஜிய விரும்பிகள் இப்படித்தான் நடந்துகொள்வார்கள்).

ராகுல் காந்தி வெளிநாட்டவர் என்று பேசிய பகுஜன் சமாஜ் கட்சியின் துணைத் தலைவரை நீக்கினார் கட்சித் தலைவர் மாயாவதி.

(மத்திய ஆசியாவிலிருந்து ஆடு, மாடுகளை ஓட்டி வந்தவர்கள்தானே பெரும்பாலும்ஆட்சியிலும்,அதி காரத் திலும் இந்தியாவில் இருக்கிறார்கள்).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner