எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜம்மு, ஜூலை 19 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3880 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஜூன் 28 ஆம் தேதி முதல் பயணிகள் குழு புறப்பட்டு சென்றது.

பகவதி நகர் மலையடிவார முகாமில் இருந்து 1,983 பயணிகள் அடங்கிய 18 ஆவது குழு 59 வாக னங்களில் நேற்று அதிகாலை புறப்பட்டுச் சென்றது.

இதற்கிடையில், சாலை விபத்து மற்றும் மார டைப்பு காரணமாக சில பக்தர்கள் இந்த ஆண்டு பயண காலத்தில் உயிரிழந்துள்ளனர்.

சரஸ்வதி தாம் ரயில் நிலையம் அருகே கடந்த 15 ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மகாராட் டிரா மாநிலத்தைச் சேர்ந்த காயா பாய் கைலே (61) என்ற பெண் பக்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்விளைவாக, இந்த ஆண்டு பயண காலத்தில் இதுவரை உயிரிழப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக்குகளுக்கு அரசு தடை

புதுடில்லி, ஜூலை 19 நாடு முழுவதும் பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் பைகளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதனால் மாநில அரசுகள் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதித்து வருகின்றன.

தற்போது டில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கும், பிளாஸ்டிக் பைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடா ளுமன்றம் நேற்று கூடிய நிலையில் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner