எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சாமியார் அமர்புரி கைது

ஹிசார், ஜூலை 21 அரியானா மாநிலத்தில் பில்லு என்கிற சாமியார் அமர்புரி (வயது 60) என்பவர் தன்னிடம் பக்தியின் பெயரால் வந்த பெண்களில் 120 பேரிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு வந்தார். பாலியல் வன்முறைக் காட்சிப்பதிவை தன்னுடைய செல்பேசிமூலமாக பதிவு செய்து, அப்பெண்களை அச்சுறுத்தி தொடர்ச்சியாக பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். உள்ளூர் நீதிமன்ற உத்தரவின்பேரில் 5 நாள்கள் காவல்துறையினரின் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சாமியாரின் செல்பேசியில் பெண்களிடம் பாலியல் வன்முறை காட்சிகள் 120 இருந்தன. சாமியாருக்கு நெருக்கமான உறவினர் செல்பேசியை காவல்துறையினரிடம் அளித்ததைத் தொடர்ந்து, சாமியாரின் மோசடிகள், பாலியல் வன்முறைகள் வெளிச்சத்துக்கு வந்தன.

காவல்துறையினர் சாமியார்மீது வழக்குப்பதிவு செய்தனர். சாமியார் அமர்புரியை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி னார்கள். கைது செய்யப்பட்ட சாமியார் மனைவியை இழந்தவர். நான்கு மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

காவல்துறையினருக்கு பணத்தை தர மறுத்துவிட்டதாலேயே தம்மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக சாமியார் அமர்புரி கூறுகிறார்.

துறவு நிலை என்பதைக் கடந்து, சாமியார்கள் என்றாலே, பணம், ஆடம்பரம், உல்லாசம் என்று ஆகிவிட்டது. அதன் தொடர்ச்சியாக சாமியார்களின் பாலியல் வன்முறைகள், குற்ற செயல்கள்  நாடு முழுவதும் பெருகிவருகின்றன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner