எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மோடி அரசு மீது சோனியா குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜூலை 23 நாடாளு மன்றத்துக்குவிரைவில்நடை பெறும் தேர்தலை சந்திக்க மத்தியில் ஆளும் பாரதீய ஜனதாவும் எதிர்க்கட்சியான காங்கிரசும் தயாராகி வருகின் றன. புதிய கட்சிகளை இணைத்தும் பழைய கூட்ட ணியை வலுப்படுத்தியும் வரு கின்றன. மக்களவைத் தேர்தல் தொடர்பாக விவாதிக்கவும், ஆலோசிக்கவும் காங்கிரசு கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டில்லியில் கூடியது. காங்கிரசு தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஏ.கே. அந்தோணி உள்ளிட்ட மூத்த தலைவர்களும், காரிய கமிட்டி உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

அவர்களுக்கிடையில் உரை யாற்றிய சோனியா காந்தி, இந் தியாவின் ஜனநாயகத்தை சீர ழிக்கும் ஆபத்தான ஆட்சியில் இருந்து மக்கள் மீட்கப்பட வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்துபேசியஅவர், இந்தியாவில் ஒடுக்கப்பட்டவர் கள் மற்றும் ஏழைகளுக்கு எதிராகஅச்சவுணர்வும்,நிலை யற்றத்தன்மையும் திணிக்கப்பட் டுள்ளது. பிரதமர் மோடியின் பேச்சுகளும், செயல்பாடும் இந்த அரசுக்கான இறங்குமுக கவுன்ட்டவுன் தொடங்கி விட்டதை காட்டுகிறது. நாட் டின் ஜனநாயகத்தை சமரசம் செய்யும் இந்த ஆபத்தான ஆட்சியில் இருந்து மக்களை நாம் மீட்டாக வேண்டும்.

இந்த பெருமுயற்சியில் கூட்டணிகளை உருவாக்கவும், காங்கிரசு தலைவர் ராகுல் காந்திதலைமையில் இணைந்து செயலாற்றவும் நம்மை அர்ப் பணித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

ராகுலுக்கு அதிகாரம்

வரும் தேர்தல்களிலும், தேர்தலுக்கு பின்னரும் கூட் டணி பற்றி தீர்மானிக்க ராகுலுக்கு அதிகாரம் வழங்க தலைவர்கள் ஆதரவுதெரிவித்தனர்.இதற்கானஅதிகாரபூர்வஅறி விப்பை வெளியிட்ட காங் கிரசு பொதுச்செயலாளர் அசோக் கெலாட், தேர்தல் பிரச்சாரக் குழு அமைப்பது, எதிர்வரும் தேர்தல்களிலும், தேர்தலுக்கு பின்னரும் கூட் டணி அமைப்பது ஆகிய அதி காரங்கள் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரி வித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner