எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழ்நாட்டில் காற்று மாசுபாடு காரணமாக சுவாசக் கோளாறுகள், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் 2016 ஆம் ஆண்டில் 480 பேர் மரணம்.

(‘வாயு பகவான்' மாசுபடுகிறான் போலும்!)

இந்தியர்கள் மூன்று பேர்களுக்குச் சொந்தமான பணம் ரூ.300 கோடி சுவிட்சர்லாந்தில் கேட்பாரற்றுக் கிடக்கிறது.

(நன்றாகத் தூங்கட்டும் - குறட்டை விட்டுத் தூங்கட்டும் - இவற்றை எல்லாம் இந்திய தூங்கு மூஞ்சி அரசு கண்டுகொள்ளப் போவதில்லை)

புதுச்சேரி மாநிலத்தில் சூப்பர் முதலமைச்சராக செயல்படுகிறார் ஆளுநர்.

- தளபதி மு.க.ஸ்டாலின், தி.மு.க. செயல் தலைவர்

(புராண மொழியில் சொல்ல வேண்டுமானால் ‘சிவன் கழுத்துப் பாம்பு')

தேர்தல் வரவிருப்பதால் ஜி.எஸ்.டி. வரி குறைப்பு.

- ப.சிதம்பரம், மேனாள் மத்திய நிதியமைச்சர்

(ரூபாய் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., நீட் இவைதான் பி.ஜே.பி. ஆட்சிக்கான மரணக்கிணறு)

உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் தமிழ்நாடு அரசுக்கு இழப்பு ரூ.3,550 கோடி.

(உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் அரசையே இழக்க வேண்டி வரும். இதற்குமுன் ரூ.3,550 கோடி இழப்பு என்பது ஒரு பொருட்டா!)

மூன்றாம் நாளாக தொடருகிறது லாரிகள் வேலை நிறுத்தம்.

(லாரி ஓடினால் என்ன? ஓடாவிட்டால் என்ன? உலகம் சுற்றும் வாலிபர் நரேந்திர மோடியின் விமானம் ஓடிக்கொண்டுதானே இருக்கிறது!)

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடையும்.

- மம்தா பானர்ஜி

(நல்ல கருத்தே - பா.ஜ.க. தோல்வி அடைய மம்தாவின் திரிணாமுல் காங்கிரசு உள்பட எதிர்கட்சிகள் அனைத்தும் சிந்தாமல் சிதறாமல் ஒன்று சேர்ந்து நிற்கவேண்டுமே!)

பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வு பெறும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்.

(எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சராக பதவி உயர்வு கிடைத்துவிட்டதே, அது போதாதா?)

விருந்தோம்பலைப் பாராட்டி பிரபல கால் பந்தாட்ட வீரர் ரொனால்டோ உணவு விடுதி ஊழியர்களுக்கு ரூ.16 லட்சம் ‘டிப்ஸ்' கொடுத்தார்.

(நம்ம ஊர் கிரிக்கெட் வீரர்களை எடுத்துக்கொள்ளுங்கள் - வாங்கும் சம்பளம் போதாதென்று சூதாட்டத்திலும் குதிப்பார்களே!)

யானை தாக்கி விவசாயி பலி.

(இதுபோல விவசாயிகள்தானே தொடர்ந்து பலியாகிறார்கள்; மக்கள் தொகையில் ஒருவர் குறைந்தார் - ஆட்சியாளர்களுக்குச் சந்தோஷம்தான்!)

மோடி அரசுக்கு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கிடைத்துள்ளது. மோடி அரசு நிறைவேற்றிய திட்டங்கள் சோடை போகவில்லை என்பதையே இது காட்டுகிறது.

- ‘தினமலர்' தலையங்கம்

(பசு பாதுகாப்புத் திட்டப்படி எத்தனைப் பேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர் - குருகுலக் கல்வி என்று ‘பேஷ் பேஷ்' எப்படிப்பட்ட திட்டங்களை எல்லாம் மோடி அரசு செய்துள்ளது; எல்லாம் சாதாரணமா?)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner