எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அரசாணையை மீறும் தலைமைச் செயலகம்:

தலைமைச் செயலகத்தில் எங்கு நோக்கினும் கடவுளர்களின்  படங்கள்!

சென்னை, ஜூலை 24 அரசு அலுவலகங்களில் எந்தவித மத சம்பந்தப்பட்ட கடவுள் படங் களும் இருக்கக்கூடாது என்ற அரசாணை இருந்தும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் எல்லா இடங்களிலும் கடவுள் படங்கள் இடம்பெற்றுள்ளன என்று நேற்றைய (23.7.2018) ‘தி இந்து' ஆங்கில ஏட்டில் வெளிவந்த கட்டுரை வருமாறு:

‘‘நம்பிக்கை என்ற பெயரில் அரசு அலு வலகங்களில் கடவுள் படங்களை வைத்து ஊதுபத்தி கொளுத்தியும், அமாவாசை அன்று பூசைகள் செய்தும் வருகின்றனர். இது அப்பட்டமான சட்டமீறல் ஆகும்.

அண்ணா முதலமைச்சராக இருந்தபோது....

அறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக பதவியேற்ற பிறகு 18.7.1968 அன்று அரசு அலு வலகங்களில் கடவுள் படங்கள் வைப்பது கூடாது என்றும், அப்படி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசாணை வெளியிட்டார். இதனடிப்படையில் சிலைகள் உள்ளிட்ட சித்திரங்கள், அச்சடித்த காகிதத்தில் உள்ள கடவுள் படங்கள், சாமியார்கள், இறைத் தூதர்கள் என்று அழைக்கப்படும் அனைவரது படங்களும் அரசு அலுவலகங்களில் இருந்து அகற்றப்பட்டன. மேலும் அந்தந்தத் துறைத் தலைவர்கள் இவ்வாறு கடவுளர் படங்கள், சிலைகளை தங்கள் அலுவலகத்தில் உள்ள அலுவலர்களோ, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்களோ யாராக இருப்பினும் வைக்க அனுமதிக்கக் கூடாது என்று அப் போதைய தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

அறிஞர் அண்ணாவின் இந்த முடிவு இந் தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தது. மதச்சார்பற்ற நாட்டில் ஒரு உண்மையான மதச்சார்பற்ற மாநிலமாக தமி ழகம் திகழ்ந்தது. இது அறிஞர் அண்ணா சார்ந்த   சுயமரியாதை இயக்கத்தின் தாக்கமே!

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது...

பின்னால் வந்த ஜெயலலிதா ஆட்சியில் மீண்டும் அரசு அலுவலகங்களில் கடவுள் படங்கள் வெளிப்படையாக இடம்பெற ஆரம்பித்தன. இதுதொடர்பாக திராவிடர் கழகம் முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்குக் கொண்டு சென்றது. இதனை அடுத்து 1993- ஆம் ஆண்டு மீண்டும் ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில் தமிழக அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை வைத்து பூசை செய்வது, இதர கடவுள் நம்பிக்கை சார்பான நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டன.

மேலும் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றமும் அரசாணையை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியது. மேலும் துறை செயலாளர்கள் அலுவலகங்களுக்குச்சென்று திடீர் சோதனை நடத்தி அரசாணைதீவிர மாகப் பின்பற்றப்படுகிறதா எனக் கண்காணிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறப்பட்டது.

ஆனால் யாரும் அரசாணை மற்றும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றியதாகத் தெரியவில்லை. அரசு அலுவலகங்களில் கடவுள் படங்கள் இருப்பதும், அமாவாசை, ஆயுதபூசை உள்ளிட்டவைகளின் போது அரசு அலுவலகத்தையே பூசை அரங்கமாக மாற்றிவிடுவதும் தொடர்கதையாக உள்ளது. சில நம்பிக்கை கொண்ட அதிகாரிகள் தினசரி அலுவலகத்தில் உள்ள கடவுள் படங்களுக்கு ஊதுபத்தி பற்ற வைத்து, வாழைப்பழம், தேங்காய் உடைத்த பிறகு வேலையைத் துவங்குகின்றனர்.

அமைச்சர் ஜெயக்குமாரின் நழுவல்

இது தொடர்பாக பொது நிர்வாகத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியபோது, ‘‘அரசு எப்போதும் மதச்சார்பற்ற அரசாகத்தான் இருக்கும்; அரசாணை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதேநேரத்தில் அரசு ஊழியர்களின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் வைக்கின்றனர்'' என்று கூறினார்.

இது தொடர்பாக திமுக முதன்மைச் செய லாளர் துரைமுருகன் கூறியபோது,

‘‘அரசாங்கம் என்பது மதச்சார்பற்றதாக இருக்கவேண்டும். ஆனால், சில மத அமைப்பு களின் அழுத்தங்களின் பெயரில் அரசு அலுவல கங்களையே பூசை மற்றும் யாகம் செய்யும் இடமாக மாற்றப்பட்டு வருகிறது. ஒரு மதத் தவருக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில், வேறு மதத்தவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆகவே, அரசு மிகவும் கடுமையாக நடவடிக்கை எடுத்து, அரசு அலுவலகங்களில் உள்ள கடவுளரின் படங்களை நீக்க முன்வரவேண்டும்'' என்று கூறினார்.

திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி இதுதொடர்பாக கருத்து தெரிவித்தபோது,

‘‘அரசு அலுவலர்களில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் தங்களுடைய அலுவலகத்தை பூசை அறையாக மாற்றி விடுகின்றனர்; இதை அனுமதிக்கக் கூடாது'' என்று கூறினார்.

- இவ்வாறு ‘‘தி இந்து'' ஆங்கில ஏட்டில் வெளிவந்துள்ளது.

தமிழகத்தில் தலைமைச் செயலகம் மட்டு மல்ல, மின்பகிர்மான அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்கள் என பல அரசு சார்ந்த அலுவலகங்களிலும், அதிகாரி மற்றும் பணியாளர்களின் மேசையின் மேலும், அலு வலகத்தின் நுழைவாயிலிலும் கடவுள் படங் களும், கடவுள் படங்கள் உள்ள காலண்டர்களும் பெரிய அளவில் காட்சி தருகின்றன. இந்தப் படங்களுக்கு நாள்தோறும் ஊதுபத்தி கொளுத்து வதும், அமாவாசை அன்று பூசைகள் செய்து பூசணிக்காய்களை உடைப்பதும் பொதுவாக நடக்கும் ஒன்றாகப் போய்விட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner