எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வருமான வரி ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிடில் ஆகஸ்டு ஒன்றாம் தேதி முதல் வரி ஏய்ப்பு சோதனையில் ஈடுபடமாட்டார்களாம்.

(வருமான வரித்துறைக்கு இப்படி ஒரு சோதனையா?)

டில்லியில் முக்கிய கேந்திர பகுதியான ஜந்தர் மந்தர் மற்றும் போட் கிளப் பகுதிகளில் போராட்டம் நடத்திட தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து விட்டது.

(இந்தியத் தலைநகரிலேயே இவ்வளவு தாராளம் - ஆனால், சென்னையை எடுத்துக்கொண்டால், மக்களே சஞ்சரிக்காத பகுதிகளிலும் போராட்டம் நடத்த அனுமதியில்லை.)

சபரிமலையில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை!

(இந்தத் தடை சரிதான்; பெண் பக்தைகளுக்கும் தடை ஏன்?)

பசு பாதுகாப்பு என்ற போர்வையில் கும்பலாக சென்று தாக்குவதைத் தடுக்க இரு உயர்நிலைக் குழுக்கள் அமைக் கப்படும்.

- ராஜ்நாத்சிங், மத்திய உள்துறை அமைச்சர்

(கும்பலாகச் சென்று சங் பரிவார்க் கூட்டம் தாக்குலை நடத்துகிறது என்பது அதிகாரபூர்வமாக மத்திய உள்துறை அமைச்சரே ஒப்புக்கொண்டு விட்டாரே!)

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிப்பதில் ஆட்சேபம் இல்லை.

- தேவேகவுடா, மேனாள் பிரதமர்

(சபாஷ்! ஒரு மூத்த அரசியல்வாதி என்பதற்கு இது தான் அழகு! மத்தியில் பாசிச ஆட்சியை வீழ்த்த காங்கிரசு தலைமையில் அனைவரும் ஒன்று சேர்வதுதான் முக்கியம்)

ஜி.எஸ்.டி. விகிதத்தை மேலும் குறைக்க பரிசீலனை!

(போகிற போக்கைப் பார்த்தால் ஜி.எஸ்.டி.யே ரத்து செய்யப்படலாம்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner