எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூலை 24 நாட்டில் பசுக்களுக்கு இருக்கும் பாது காப்பு பெண்களுக்கு இல்லை என்று பாஜகவை சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாம்னா'வுக்கு அக் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் சிவசேனா அங்கம் வகிக்கிறது. இருப்பி னும், தவறு ஏதேனும் நடை பெற்றால், அதை எதிர்த்து சிவசேனா குரல் கொடுக்கும். எங்கள் கட்சி, பாஜகவின் நட்பு கட்சியாகும். வேறு கட்சி களுடன் எங்களுக்கு நட்பு கிடையாது.

நாட்டில் நடக்கும் கும்பல் கொலை குறித்து கேட்கிறீர்கள். பாஜகவின் இந்துத்துவா சித் தாந்தமானது போலியானது. பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் தாக்குதல்களை தடுக் கும் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு தோல்வியடைந்து விட்டது. நாட்டில் பசுக்களுக்கு இருக்கும் பாதுகாப்பு கூட, பெண்களுக்கு இல்லை.

பசுவை பாதுகாக்கிறோம் என்ற பெயரில், மக்கள் மாட்டி றைச்சியை உண்கிறார்களா? இல்லையா? என்ற கண் காணிப்பில் ஈடுபடுவது அவ மானகரமான செயலாகும்.

நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்புஇல்லாதசூழ் நிலைநிலவுகிறது.இந்நிலை யில்,பசுக்களுக்குபாதுகாப்பு அளிக்கும் பணி  நடக்கிறது.பசுக்களுக்குபாதுகாப்பு அளிக்கப்படும் அதேவேளை யில், உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக இந்தியா உருவாகியுள்ளது. இதற்காக நாம் வெட்கப்பட வேண்டும்.

தேசியவாதம் குறித்து பாஜக பேசுகிறது. யார் தேசியவாதிகள்? யார் தேசவிரோதிகள்? என்று முடிவு செய்ய பாஜகவுக்கு உரிமைகிடையாது. அரசை விமர்சிப்பவர்கள் தேச விரோ திகள் ஆகிவிட மாட்டார்கள் என்றார் உத்தவ் தாக்கரே.

மத்தியிலும், மகாராஷ்டிர மாநிலத்திலும் அமைந்துள்ள பாஜக தலைமையிலான கூட் டணி அரசில் சிவசேனையும் அங்கம் வகிக்கிறது. இருப் பினும், மத்திய, மகாராஷ்டிர அரசுகளை சிவசேனா தொடர்ந்து விமர்சித்து வருகிறது. 2019 ஆம் ஆண்டு மக்களவை, மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் தனித்து போட்டியிடப் போவதாகவும் சிவசேனா அறிவித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner