எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆடி வழிபாடு

ஆடி அம்மனுக்கு உரிய மாதம். இதற்கான காரணம் தெரியுமா....

பிரம்மாவின் அருள் பெற்றவன் ஆடி என்னும் அரக்கன். நினைத்ததும் விரும்பிய வடிவத்தை அடையும் வரத்தை பெற்றவன். ஒருமுறை சிவனை ஏமாற்ற விரும்பிய அவன், தன் வடிவத்தை பார்வதிபோல மாற்றிவிட்டு கைலாயத்திற்குள் நுழைந்தான். விஷயம் அறிந்த சிவனுக்குக் கோபம் எழவே, நெற்றிக்கண்ணால் அரக்கனை எரித்து சாம்பலாக்கினார். ஆனால், அரக்கன்மீது பார்வதிக்கு இரக்கம் உண்டானது. மாதங்களில் ஒன்றுக்கு ஆடி' என பெயரிட்டதோடு, அதில் அம்மன் கோவில்களில் வழிபாடு நடத்தும் வழக்கத்தையும் உண்டாக்கினாள் பார்வதி. இதனடிப்படையில் பக்தர்கள் ஆடி மாதத்தில் அம்மனை சிறப்பிக்கின்றனர்.

எந்த புராணம் இதிகாசத்தை எடுத்துக்கொண்டாலும் ஓர் அரக்கன் வந்து விடுவான். அரக்கன், அசுரன் என்பெதல்லாம் திராவிடர்களே என்பது வரலாற்றாசிரியர்களின் முடிவு.

அது சரி... இந்தக் கடவுள் சமாச்சாரத்தில் ஏமாற்றுதல், கோபம், பொங்கி எழுதல், சாபமிடுதல் என்பதெல்லாம் சர்வ சாதாரணமாக இருக்கும்போது, இதிலிருந்து மனிதன் கற்கவேண்டிய ஒழுக்கம் எங்கே இருக்கிறது?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner