எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அகமதாபாத், ஜூலை 26 கடந்த 2015- ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தி னருக்கு இடஒதுக்கீடு கோரி மிகப்பெரியஅளவில் போராட் டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தைஹர்திக்பட் டேல் முன்னின்று நடத்தினார். அப்போது, மேஹ்சனா மாவட் டத்தின் விஸ்நகரில் உள்ள பாஜக எம்.எல்.ஏ. ரிஷிகேஷ் பட்டேலின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. இது தொடர்பாக ஹர்திக் பட்டேல், அவரது ஆதரவாளர்கள் லால்ஜி பட்டேல் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விஸ்நகரில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது.

இதற்கிடையே,இந்தவழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்புஅறிவிக்கப்பட்டது.ஹர்திக்பட்டேல்,லால்ஜிபட் டேல் மற்றும் சர்தார் பட்டேல் அமைப்பின் தலைவர் ஆகி யோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், பா.ஜ.க. அரசு நிர்வாகத்தை தவறாக பயன்படுத்தி ஹர்திக் படேலை கைது செய் துள்ளது என காங்கிரசு கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக, மாநில காங்கிரசு தலைவர் அமித் சாவ்டே கூறுகையில், குஜராத் மாநிலத்தை ஆட்சி செய்து வரும் பாஜக அரசு சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்கிறது. இட ஒதுக்கீடு கேட்டு போராடி வரும் இளைஞர்கள் மீது பொய் வழக்குகளை போட்டு அவர்களின் குரல்களை அடக்க நினைக்கிறது. மேலும், மாநில அரசு நிர்வாகத்தை தவறாக பயன்படுத்தி வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner