எழுத்துரு அளவு Larger Font Smaller Font

என்ன தடையோ...?

உனக்குப் பணி செய்ய உன்றனை எந்நாளும்

நினைக்க வரம் எனக்கு நீ தா மனக்கவலை

நீக்குகின்ற தென்மதுரை நின்மலனே எவ்வுலகும்

ஆக்குகின்ற சொக்க நாதா

பொருள்: சொக்கநாதப் பெருமானே! உமக்குப்  பணி செய்து வாழவும், உன்னை தினமும் மனதில் நினைக்கவும் வரம் தரவேண்டும். கவலையைப் போக்குபவரே! தென்மதுரையில் கோவில் கொண்ட நிர்மலனே! எவ்வுலகத்தையும் ஆக்குகின்ற இறைவனே! அருள்புரிவீராக!

கடவுளுக்குப் பணி செய்ய கடவுளை வேண்டுவானேன்? அதற்குக் கூடக் கடவுள்தான் அருள்புரிய வேண்டுமா? சொக்க நாதனை, தானாகவே வேண்டுவதற்கும் என்ன தடையோ!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner