எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அய்ந்து குழந்தைகளை இந்துக்கள் பெற வேண்டுமாம்

பாஜக எம்.எல்.ஏ. சுரேந்திர சிங்

புதுடில்லி, ஜூலை 28 இந்து மதத்தையும், பாரதிய ஜனதா கட்சியைக் காப்பாற்றவும் ஒவ்வொரு இந்து தம்பதியும் அய்ந்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங் கூறி யுள்ளார். பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் சுரேந்திர சிங் ஏஎன்அய் செய்தி நிறுவனத் துக்கு 25.7.2018 அன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

மக்கள் தொகையில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகரித்திட வேண்டும். பாரதியத்தையும், இந்துத்துவாவையும் அழியாமல் காப்பாற்றிட இந்து தம்பதி யர் அனைவரும் குறைந்த பட்சம் 5 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண் டும் என்று அனைத்து மகந்துகளும் நம்பு கிறார்கள் என்று  கூறியுள்ளார்.

சுரேந்திர சிங் 24.7.2018 அன்று பகு ஜன் சமாஜ் கட்சித் தலைவர் செல்வி மாயாவதியை எருமை மாட்டுடன் ஒப் பிட்டுபேசியுள்ளார்.பாஜகவுடனானகூட்ட ணியில் பல அரசியல் கட்சிகள் உள்ளது குறித்து பேசுகையில், அவ்வாறு மாயா வதியை இகழ்ந்து பேசியுள்ளார்.

பாஜகவிலுள்ள ஒருவர் இவ்வாறு பேசுவது என்பது இது முதல் முறையல்ல. கடந்த 2016ஆம் ஆண்டில் சாமியார்கள் கூட்டத்தில், பாஜக எம்பி சாமியார் சாக்ஷி மகராஜ் பேசும்போது, நான்கு மனைவிகள், நாற்பது குழந் தைகள் இந்தியாவில் வேலைக்கு ஆகாது. ஆனால், இந்து மதத்தை பாதுகாப்பதற்கு ஒவ்வொரு இந்து பெண்ணும் குறைந்த பட்சம் நான்கு குழந்தைகளை ஈன்றெடுக்க வேண்டும் என்று பேசினார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக, மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் ஷியாமால் கோஸ்வாமி  ஒரு பள்ளியில் நடைபெற்ற விவேகானந்தர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பேசியபோது இந்துதாய்மார்களுக்கும்,இந்துசகோ தரிகளுக்கும் நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அது என்னவென்றால், அய்ந்து குழந்தைகளைப் பெற்றிராவிட்டால், எதிர்காலத்தில்சமநிலையைஎட்டமுடி யாது.என்னைதவறாகப்புரிந்து கொள்ள வேண்டாம்.இந்துமதத்தையும்,சனாதன தர்மத்தையும்  பாதுகாக்க, அவசியப்பட் டால் அனைத்து இந்துக்களும் அய்ந்து குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண் டும் என்றார்.

கோஸ்வாமியின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டனத்தை வெளியிட்டன. மத்தியில் ஆளும் கட்சி சமுதாயத்தில் மக்களை பிளவுபடுத்த முயற் சிக்கிறது என்று குறிப்பிட்டு கண்டனத்தை தெரிவித்தார்கள்.இந்நாள்...இந்நாள்...

1936 - பெரியாரின் அன்னையார் சின்னத்தாய் அம்மாள் மறைவு

இயற்கை பாதுகாப்பு நாள்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner