எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காவேரி மருத்துவமனை அறிக்கை

சென்னை, ஜூலை 28 திமுக தலைவர் கலைஞருக்கு நேற்று (27.7.2018) இரவு 12.30 மணியளவில் மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக அவர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில், காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், ரத்த அழுத்த குறைவு காரணமாக தி.மு.க. தலைவர் கலைஞர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு ரத்த அழுத்தம் சீராக உள்ளது. கலைஞரின் உடல் நிலையை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளது.

வதந்திகளை நம்ப வேண்டாம்

தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை தொடர்பாக விஷமிகள் திட்டமிட்டுப் பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர் சிகிச்சையின் விளைவாக கலைஞரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. மருத்துவர்கள் 24 மணி நேரமும் அவரை கவனித்து சிறப்பாக சிகிச்சையளித்து வருகிறார்கள். மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று பொதுமக்கள், கழக தொண்டர்கள் அவரை பார்க்க வருவதை தவிர்க்க வேண்டும். விஷமிகள்  திட்டமிட்டுப் பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner