எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆகமப் பயிற்சி பெற்ற, பார்ப்பனரல்லாதார் மதுரையில் முதல் அர்ச்சகராக அரசு நியமனம்!

மதுரை, ஜூலை 31 அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் தீண்டாமை-ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை தந்தை பெரியார் தன் வாழ்நாளின் இறுதிப் போராட்டமாக அறி வித்தார். அதற்கான பிரச்சார களத்தில் இருக் கும்போதே தன் இறுதி மூச்சைத்துறந்தார்.

தந்தை பெரியார் அவர்களின் அறிவிப்பை ஏற்று தி.மு.க. ஆட்சியில், முதலமைச்சர் கலைஞர் அவர்களின் முயற்சியால், சட்டம் ஒன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது (2.12.1970).

முதலில் இதனை எதிர்த்து சிறீபெரும் புதூர் அகோ பில மட ஜீயரும், தஞ்சாவூர் சங்கராச்சாரியார்ஆதிக்கத்தின்கீழ்பங்காரு காமாட்சியம்மன் கோவில், திருச்சி மாவட் டத்தில் உள்ள அல்லூர் கோவில் ஆகியவற்றில் உள்ளவர்கள் உள்ளிட்ட 12 ரிட் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய சட்டம் செல்லும் என்று கூறிய உச்சநீதிமன்றம், ஆகம விதிகளின் பாரம்பரியத்திலிருந்து மாறி சீர்திருத்தம் செய்யும் உரிமையை மறை முகமாக முடக்கினர்.

ஆனாலும், திராவிடர் கழகம் தொடர்ந்து போராட்டங்களையும், மாநாடுகளையும் நடத் திய வண்ணமே இருந்தது.

தந்தை பெரியார் நூற்றாண்டு விழா வினையொட்டி எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது ஜஸ்டீஸ் திரு.எஸ்.மகராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆகமப் பயிற்சி பெற்றவர்கள் ஜாதி வேறுபாடின்றி இந்துக் கோவில்களில் அர்ச்சகர்களாக நியமனம் செய்யலாம் என்று அந்தக் குழுப் பரிந்துரை செய்தது.

மகராஜன் குழுப் பரிந்துரைகளின் அடிப் படையில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் நியமனம் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைமையில் 13  பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவ தற்கு ஆகமங்கள் தடையில்லை -- பயிற்சி அளிக்கப்பட்டு அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கலாம் என்று இந்தக் குழுவும் பரிந்துரை செய்தது என்றாலும், செல்வி ஜெ.ஜெயலலிதாமுதலமைச்சராகஇருந்த போது வெறும் அறிவிப்புகள் இருந்தனவே தவிர செயல்படுத்துவதற்கான எந்த உருப்படி யான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கலைஞர் அவர்கள் மீண்டும் 2006 இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நிலையில், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வழங்குவதற்கான ஆணை வழங்கப் பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான ஆணையம் ஆகமப் பயிற்சிக் கூடங்கள் அமைப்பது குறித்து பரிந் துரையை வழங்கியது.

அதன்படி மதுரை, பழனி, திருச்செந்தூர், திருவண்ணாமலைஆகியநான்குஇடங் களில் சைவக் கோவில்களுக்கான பயிற்சி யும்,சென்னை,திருச்சியில்வைணவக் கோவில்களுக்கான பயிற்சியும் அளிக்கப் பட்டது. 206 பேர் 69 சதவிகித அடிப்படையில் பயிற்சி பெற்று வெளியில் வந்தனர்.

இதற்கான ஆணையை எதிர்த்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள ஆதி சிவாச்சாரியார் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது.

2015 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சம்பந்தப்பட்ட கோவில் களின் ஆகம விதிகளை மீறாமல் அனைத்து ஜாதியினரிலிருந்தும் அர்ச்சகர்களை நிய மிக்கலாம் என்று கூறப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து ஜாதியினரையும் சேர்ந்த பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகராக் கலாம்என்றுதிராவிடர்கழகம்வலி யுறுத்தி வந்தது. உச்சநீதிமன்றத்தீர்ப்பை செயல்படுத்தவேண்டும் என்று ஆர்ப்பாட்டங் கள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், காலந்தாழ்ந்தாவது இப்பொழுது மதுரை தல்லாகுளத்தில் உள்ள இந்து அறநிலையத் துறையின்கீழ் உள்ள அய்யப்பன் கோவிலில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாத மாரிசாமி என்பவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது வரவேற்கத்தக்க மகிழ்ச்சியான செய்தியாகும்.

இது தந்தை பெரியார் கொள்கைக்கு, அயராது இதற்காகப் பாடுபட்டு வந்த திராவிடர் கழகத்திற்கு, இதற்குச் சட்ட வடிவம் கொடுத்து செயல்படுத்த பெருமுனைப்புக் காட்டிய மானமிகு சுயமரியாதைக்காரரான' கலைஞருக்கும் கிடைத்த வெற்றி மாலை யாகும்.

தந்தை பெரியார் மறைந்தபோது, தந்தை பெரியாரின் இறுதி ஆசையான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற இறுதிக் கட்டளையை நிறைவேற்ற முடிய வில்லையே, அந்த நெஞ்சில் தைத்த முள்ளோடு தந்தை பெரியாரைப் புதைத்துவிட்டோமே என்று, தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் முதலமைச்சர் கலைஞர். கலைஞர் அவர்கள் காலத்திலேயே அந்த முள் நீக்கப்பட்டதானது, மருத்துவமனையில் நோயோடு போராடிக் கொண்டிருக்கும் கலைஞர் அவர்களுக்கான வெற்றி மாலை என்பதில் அய்யமில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner