எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வெள்ளகோவில்,ஜூலை31தமி ழர்களை இந்தியா வஞ்சிக்கி றது'' என்று சொந்த இடத்தில் வாசகம் எழுதியிருந்த மருத் துவமனை நிர்வாகத்திற்கு பிஜேபியினர் கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.இதனால் மருத்துவமனை நிர்வாகம் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளது.

பிஜேபியைச் சார்ந்தவர்கள்...

திருப்பூர்மாவட்டம்காங் கயம் வட்டம் வெள்ளகோவில் நகர்ப்பகுதிஈரோடுசாலை கொங்குநகர் பகுதியில் மருத்துவர் மு.காரமேகன் எம்.எஸ் என் பவருக்குச்சொந்தமான சிபி மருத்துவமனை உள்ளது.இங்கு பொதுமக்கள் பார்வைக்கு சிந்தனைக்கருத்துக்களை தாங்கியபதாகைகள் ஒட்டியிருப்பது வழக்கம்! கடந்த 26.07.2018 வியாழனன்று இம் மருத்துவமனையின் எதிரிலுள்ள ஆயிர நகர வைசியர் திருமண மண்டபத்தில் பிஜேபியைச் சார்ந்தவர்கள் அரங்கு கூட்டம் நடத்தியுள்ளனர். கூட்டம் முடிந்தபின் பிஜேபியின் திருப் பூர் தெற்கு மாவட்ட தலைவர் பொன்.ருத்ரகுமார் தலைமையில் 20 க்கும் மேற்பட்டோர் மண் டபத்திலிருந்து வெளியேறி மருத்துவமனைக்குள் அத்து மீறிச் சென்று அங்கு ஒட் டப்பட்டிருந்த "தமிழர்களை இந்தியாவஞ்சிக்கிறது" என்ற பதாகையைகிழித்தெ றிந்து, கூச்சலிட்டு கதவு களைத்தட்டியபடிகொலை மிரட்டல்விடுத்துமருத்துவ மனையிலிருந்த பணியாளர்க ளோடு தகராறு செய்துள்ளனர்.

கண் காணிப்பு காமிராவில் பதிவு

இந்த குற்ற நடவடிக்கைகள் யாவும் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கண் காணிப்பு காமிராவில் பதி வாகியுள்ளது. இது குறித்து மருத்துவர் மு.கார்மேகன் காவல்துறையில் புகார் தெரி வித்துள்ளார். அப்புகாரில்மருத் துவமனைக்குள் அத்து மீறி நுழைந்து பதாகைகளைக்கிழித் தெறிந்து, கொலைமிரட்டல் விடுத்து அடாவடியில் ஈடுபட்ட பொன்.ருத்ரகுமார் உள்ளிட்ட நபர்கள்மீதும்,இதற்கு தூண்டு கோலாய் இருப்பதாக தான் அய்யப்படும்பிஜேபிதொடர் புடையவரும், ஏற்கெனவே நிலத்தகராறுகாரணமாக தனக்கு முன் விரோதம் உள்ளவருமான நாராயணசாமி என்பவர் மீதும் உரிய நடவடிக்கை மேற் கொள்ளவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.இந்நாள்...இந்நாள்...

1965 - கழக நடவடிக்கையால் பிற்படுத்தப்பட்டோருக்கான 50 விழுக்காடு இட ஒதுக்கீடு நீடிப்பு

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner