எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை காவேரி மருத்துவமனையில் இருந்து வரும் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நலனை நேற்று (30.7.2018) மாலை தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தமிழர் தலைவர் விசாரித்து அறிந்தார். ஏற்கெனவே இருந்துவரும் சீரான நிலையில் மாற்றம் இல்லை - தொடர்ந்து சீராக இருந்து வருகிறது என்றார் தளபதி மு.க.ஸ்டாலின்.

தைரியமாக இருந்து அதேநேரத்தில், உடல் நலனிலும் கருத்துச் செலுத்தி செயல்படுமாறு தளபதி ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக்கொண்டார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கழகத் தலைவருடன் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், வழக்குரைஞரணி தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன் ஆகி யோரும் சென்றிருந்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner