எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக விஜயா கமலேஷ் தஹில ரமானி பதவியேற்பு

சென்னை, ஆக.13 சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தஹில ரமானிக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த இந்திரா பானர்ஜி, சமீபத்தில் பதவி உயர்வு பெற்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியும் பொறுப்பு தலைமை நீதிபதியுமான விஜயா கமலேஷ் தஹில ரமானி என்பவரை குடியரசுத் தலைவர் நியமித்து உத்தரவிட்டார். இந்தநிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கும் நிகழ்ச்சி நேற்று காலை 10.30 மணிக்கு கிண்டியில் உள்ளஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அப்போது தஹில ரமானியை தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் பிறப்பித்தஉத்தரவைஆளுநர்அவரிடம்வழங்கினார்.அதனைத் தொடர்ந்து, ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.  நிகழ்ச்சியில் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியும், சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான இந்திரா பானர்ஜி கலந்து கொண்டார்.  மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், எஸ்.மணிக்குமார் உள்பட உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்,  மூத்த வழக்குரைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அரசின் திட்டங்களை பிரபலப்படுத்த ஊழியர்கள் நியமனம்: மாயாவதி கண்டனம்

க்னோ, ஆக.13 உத்தரப்பிரதேசத்தில் அரசின் திட்டங்களை பிரபலப்படுத்த "லோக் கல்யாண் மித்ரா' என்ற பெயரில் ஊழி யர்களை அந்த மாநில அரசு நியமிக்க முடிவு செய்திருப் பதற்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாயாவதி பேசுகையில், "வறுமையில் இருக்கும் மக்களுக்கு பயன்படாத வகையில் உள்ள அரசின் திட்டங்களைப் பரப்புவதற்கு, இந்த பதவியை உருவாக்கியது அரசு பணத்தை வீணாக்கும் செயலாகும். அரசு பணத்தை இவ்வாறு வீணாக்காமல், அரசாங்கத்தின் பல்வேறு நிலைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பினால் சமூகத்தில் உள்ள பலதரப்பட்ட இளைஞர்கள் பயனடைவார்கள்.  ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் அரசின் திட்டங்களை பரப்புவதில் உற்சாகம் இல்லை என்பதை இந்த பதவி நியமனம் நிரூபிக்கிறது' என்றார். அரசின் திட்டங்களை கிராம அளவில் கொண்டு சேர்க்கும் நோக்கில், "லோக் கல்யாண் மித்ரா' என்ற பதவியை ஊராட்சிக்கு ஒரு பணியிடம் என்று 824 பணியிடங்களை நிரப்புவதாகவும், எழுத்துத் தேர்வின் மூலம் அவர்கள் தேர்ந் தெடுக்கப்படுவார்கள் என்றும் அண்மையில் உத்தரப்பிரதேச மாநில அரசு அறிவித்திருந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner