எழுத்துரு அளவு Larger Font Smaller Font

விசாரணை நீதிபதியைக் கண்டு அர்ச்சகர்கள் ஓட்டம்!

ராமேசுவரம், ஆக.13 ராமேசுவரத் துக்கு தர்ப்பண பூஜைகள், தில ஹோம பூஜைகள், தோச நிவர்த்தி பூஜைகளுக்கு பக்தர் களிடம் புரோகிதர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள்வந்தவண்ணம்இருந் தன. கட்டணம் நிர்ணயித்தும் அதனை சிறிதும் பொருட்படுத்தா மல் இருந்தனர். இந்த பகல் கொள்ளையால் பக்தர்கள் மனம் புழுங்கி வந்தனர்.

இதே போல் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராட பக்தர் ஒருவருக்கு திருக்கோவில் நிர்வாகத்தால் ரூ.25 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கூடுதலாகவேகட்டணம்வசூ லிக்கப்பட்டு வருவதாககூறப் படுகின்றது. இதுபற்றி திருக் கோவில் அதிகாரிகளுக்கு முழு மையாக தெரிந்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமலும் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர் என்றும் பக்தர்கள் மனம் வெதும்பினர்.

இந்த நிலையில் உயர்நீதி மன்ற உத்தரவை தொடர்ந்து ராமேசுவரம் கோவிலில் அடிப் படை வசதிகள் குறித்து மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி அக்னி தீர்த்த கடற்கரை மற் றும் கோவிலுக்குள் ஆய்வு செய்ததுடன் பக்தர்கள் மற் றும் புரோகிதர்களிடம் விசா ரணை மேற்கொண்டார். அவ ருடன் இலவச சட்ட உதவி சார்பு நீதிபதி ராமலிங்கம், ராமேசுவரம் நீதிபதி சிறீதேவி ஆகியோரும் வந்திருந்தனர்.

அதிரடி ஆய்வு மேற் கொண்ட நீதிபதிகள் அடுக் கடுக்காக கேள்விக்கணை தொடுத்தனர். அதற்குபதில் சொல்ல முடியாமல் புரோகிதர் கள் திக்குமுக்காடினர். சிலர் நீதிபதிகளைக்கண்டதும்அங்கி ருந்து ஓட்டம் பிடித்து விட் டனர்.

விசாரணையில் பூஜைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப் பதும், தீர்த்தமாட பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதும் தெரியவந்துள்ளது. நீதிபதியின் ஆய்வறிக்கை உயர்நீதிமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner