எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தந்தை பெரியாரின்

பேரப் பிள்ளைகளே!

தமிழ்க் குலத்தில்

பூத்த முல்லைகளே!

வாஞ்சையுடன்

அழைக்கிறது திண்டுக்கல்

வாருங்கள், கிடைத்திடும்

முத்துக்கள்!

வாருங்கள் வாழ்வின்

அரும்புகளே

வற்றா அன்பின்

கரும்புகளே!

பெரியார் பிஞ்சுகள்

மாநாடு

பங்கு பெற்றோம் - நற்

பேறு பெற்றோம்!

பீடு பொங்கவே குதித்தாடு

பிஞ்சுகளோடு

உறவாடு!

விஞ்ஞான வித்தைகள்

கூத்தாடும் - புது

சித்திர வண்ணங்களும்

பந்தாடும்!

எல்கேஜி

பிள்ளைகளும் பாடிடும்

பல் முளைக்கா

மழலைகளும் ஆடிடும்

வெல்லக் கட்டியாய்

உதிரும் பேச்சுகள் பொல்லா' சேட்டைகளும்'

குதிரும் ஆட்டங்கள்!

காணக் கண்கள்

கோடி வேண்டும்

காற்றாய்ப் பறந்து

வந்திடுக!

பிஞ்சுகளே, பிஞ்சுகளே

புறப்படுக!

திண்டுக்கல் தரும்

தேன் சாற்றை

உண்டு நீ

மகிழ்ந்திடுக!

பெற்றோர்களை

நச்சரித்திடுக

பஞ்சு போல்

பறந்து வந்திடுக!

உங்கள் தாத்தா

வீரமணி

பொங்கிடும் மகிழ்ச்சியால்

காத்திருப்பார்!

- கவிஞர் கலி.பூங்குன்றன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner