எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக.15 அரக்ஷன் விரோதிகட்சி என்கிற பெயரிலுள்ள இந்துத்துவா அமைப்பு ஒன்று டில்லி ஜந்தர் மந்தரில் நாடாளுமன்ற தெருவில் கடந்த9.8.2018 அன்றுபோராட் டத்தை நடத்தியது. அப் போது காவல்துறையினர் முன் னிலையிலேயே அரசமைப்புச் சட்ட சிற்பி டாக்டர் பி.ஆர். அம்பேத்கருக்குஎதிராகமுழக் கங்களைஎழுப்பி, அரசமைப்புச் சட்டத்தின் நகலைக் கொளுத் தினர்.

அகில பாரதீய பீம் சேனா அமைப்பின் தலைவர் அனில் தன்வார் அளித்த புகாரின்பேரில் டில்லி   காவல்துறையினர் 10.8.2018 அன்று வழக்குப் பதிவு செய்தனர். காவல்துறை துணை ஆணையர் மாத்தூர் வெர்மா கூறுகையில்,

சமத்துவத்துக்கான இளை ஞர்கள் --ஆசாத் சேனா என்கிற பெயரிலானஅமைப்பும், அரக் ஷன் விரோதி கட்சி என்கிற அமைப்பும் இணைந்து நடத்திய போராட்டத்தில்டாக்டர்அம் பேத்கருக்கு எதிரான முழக் கங்கள் ஒலிக்கப்பட்டு, அரச மைப்புச் சட்டத்தின் நகலும் எரிக்கப்பட்டது.இந்தப் போராட்டம்தீபக்கவுர்,அபி ஷேக் சுக்லா ஆகியோர் தலை மையில் நடைபெற்றது என்றார்.

இவ்வழக்கில் தொடர்பு டைய குற்றவாளிகள் தேடுதல் வேட்டையில் அரியானா, டில்லி,உத்தரப்பிரதேசம்உள் ளிட்ட பகுதிகளில்  காவல்துறை யினர் ஈடுபட்டனர். பரிதாபாத்தில் மறைந்திருந்த தீபக் கவுர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சுக்லா உள்ளிட்டவர்கள் தலை மறைவாக உள்ளனர்.

கைது செய்யப்பட்ட தீபக் கவுரிடம் காவல்துறையினர் விசாரணைசெய்தபோது,தாழ்த் தப்பட்டவர்கள்மற்றும்பழங் குடியினருக்கு எதிரான வன் கொடுமைத் தடுப்புச்சட்டத் திருத்தம்குறித்து எதிர்க்கட்சி களின் கவனத்தை ஈர்ப்பதற் காகவே அரசமைப்புச்சட்டத்தின் நகலைக் கொளுத்தினோம் என்று தீபக் கவுர் கூறியதாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner