எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இசையா? இனமா?

கருநாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா, கருநாடக இசையின் சுர வரிசைகளை எளிய மக்களுக்கும் கற்றுக் கொடுத்து சமஸ்கிருத தெலுங்கு மொழிப் பாடல்கள் இல்லாமல்மக்களுக்குஏற்ற வகையில் பாடுவதில் வல்ல வர். அதற்காக கருநாடக இசை மேதைகள் முதல் சபாக்கள் வரை அவருக்கு எதிர்ப்பு. அதன்பின் இன்னும் தீவிரமாக குப்பம் இசைத் திருவிழாவை ஆண்டு தோறும் நடத்துகிறார்.

அண்மையில் கருநாடக இசையில் கிறித்துவ பாடல் களைப் பாட இருந்த ஓ.எஸ்.அருண் என்ற கருநாடக இசைப் பாடகரின் கச்சேரி இந்துத்துவா தீவிரவாதிகளின் எதிர்ப்பால் ரத்து செய்யப் பட்டது.அதேபோல்,கரு நாடக இசையில் ஏசுவைப்பற் றிய பாடலைப் பாடியதற்காக பழம்பெரும் பாடகர் டி.கே. பட்டம்மாளின் பேத்தியான பாடகர் நித்யசிறீ மகாதேவன், பார்ப்பனர்களின் கொடுமை யான வசைமொழிகளாலும், இந்துத்துவா தீவிரவாதிகளின் உளவியல் தாக்குதலாலும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாடகர் டி.எம்.கிருஷ்ணா இனி மாதம் ஒரு பாடல் கருநாடக இசையில் ஏசு மீதும், அல்லாமீதும் பாடி வெளியிடுவேன்'' என்று அறிவித்துள்ளார்.

பார்ப்பனஇனவெறியும், மதவெறியும் இந்துத்துவா வாதிகளுக்கு இரு கால்களாக உள்ளன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு!

தமிழில் பாடக் கூடாதா என்று கேட்டால், இசைக்கு மொழி இல்லை என்று பசப் புவார்கள் பார்ப்பனர்கள். அதேபார்ப்பனக்கூட்டத் திற்குகருநாடகஇசையில் ஏசுவையோ,அல்லாவையோ பற்றிப் பாடினால், பற்றிக் கொண்டு எரிகிறது.

பிரபல கருநாடக பாடகர் ஜேசுதாஸ் குருவாயூர் கோவி லில் நுழைய முடியாது. காரணம்,குருவாயூர்என்ற இந்துக் கோவிலில் கிறித்தவ ரான ஜேசுதாஸ் பாட முடி யுமா?

மியூசிக் அகாடமியில் பாட ஜேசுதாசை ஏன் கூப்பிடுவதில்லை?

அதற்கு ஜேசுதாஸே சொன்னகாரணம்முக்கி யமானது - ஏன் சுவையான தும்கூட!

தியாகராஜர்என்தாத் தாவை மடியிலே உட் கார்த்தி வெச்சுண்டு பாட் டுப் பாடி பாட்டுப் பாடி சாதம் ஊட்டியிருக்கார்'னு சொல்றவங்களுக்கு மத்தி யிலே நான் பாரம்பரியம் இல்லாத அந்நியன்தானே!''

(ஆனந்தவிகடன்', 20.12.1992)

சொன்னவர் ஜேசுதாஸ் - திராவிடர் கழகத் தலைவர் வீரமணியல்ல!

தெரிந்துகொள்வீர் பார்ப் பனர்களை!

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner