எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்துக்களுக்காக இந்து நீதிமன்றமாம் துவக்கியது இந்து மகா சபா கும்பல்!

லக்னோ, ஆக. 18 -பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் அனைத்து நடவடிக்கைகளும் மதவெறி மயமாக்கப்பட்டு வருகின்றன. பெண்கள், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மை யினருக்கு எதிராக வெறுப்பு பரப்பப்பட்டு வருகிறது. தீண்டாமைக் கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகள், மாட்டிறைச்சி வைத்திருப்பவர்கள் மீதான தாக்குதல் என உத்தரப்பிரதேசத்தில் அராஜகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், புதிதாக இந்து நீதிமன்றம் என்ற அமைப்புமுறையை, அகில பாரதீய இந்து மகாசபை, உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரில் துவக்கியுள்ளது. இந்துக்கள் தங்களுக்கு உள்ளான பிரச்சினைகளை இந்த நீதிமன்றத்தை அணுகி தீர்த்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ள இந்து மகாசபை, இதன் முதல் நீதிபதி என்று பூஜா ஷகுன் பாண்டே என்பவரை நியமித்துள்ளது.

இசுலாமியர்களுக்கு இருக்கும் ஷரியத் சட்டத்தைப் போல, இந்துக்களுக்கென்று இந்த நீதிமன்றத்தைத் துவக்கி இருப்பதாக வும், இந்துப் பெண்கள், இந்துத் திருமணம், சொத்து மற்றும் பணம் உள்ளிட்ட விஷ யங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி இந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்றும் இந்து மகா சபையின் செயலாளர் பண்டிட் அசோக் சர்மா என்பவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனை முதல் அதிகபட்சமாக தூக்குத் தண்டனை வரை இந்த நீதிமன்றம் வழங் கும் என்றும் அதிர்ச்சி அளித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner