எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவனந்தபுரம்,ஆக.18பேரழிவின்விளிம் பில் நிற்கும்போதுகூட, கேரளமக்கள் மீது விஷத்தைப் பொழிந்து, மனிதநேய மற்றவர்களாக சங்-பரிவார்கள் தங்களை அடையாளப்படுத்தியுள்ளனர்.

கேரள மாநிலம், தற்போது எதிர்கொள் ளும், பெருமழையும், பேரழிவும், கேரள மக்களுக்கு, தேவை தான்... இந்தப் பேரழி வுக்கு, ஒருரூபாய் கூட, இந்துக்கள் தரக் கூடாது... கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு, எந்தவித நன்கொடையும் வழங்கக் கூடாது... என்று வடஇந்தியாவிலிருந்து, தென் மாநிலங்களுக்கு, ட்விட்டர், முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊட கங்கள் மூலம் அவர்கள் உத்தரவுகளை வழங்கியுள்ளனர். கேரள மக்களை, மத ரீதியாகவும், அரசியல் சார்பு ரீதியாகவும் தரம் பிரித்து, சங்-பரிவார்கள் தங்களின் கொடிய, கொடுக்குகள்மூலம் கொட்டியிருப்பது, சமூக வலைத்தளங்களில் கோப அலைகளை உருவாக்கியுள்ளது.

பெருவெள்ளம் பாதித்துள்ள பகுதி களை, பகுதி வாரியாகப் பிரித்து, எந்தெந்த பகுதிகளில், கிறித்துவ மக்கள் தொகை அதிகம்; எந்தெந்த பகுதிகளில் இசுலாமிய மக்கள் தொகை அதிகம்; எந்தெந்த பகுதி களில் கம்யூனிஸ்டுகள் அதிகம் என்பதை வரையறுத்து அவர்கள் பிரச்சாரம் செய்து வருவது கடும் கண்டனத்திற்கும் உள்ளாகி யிருக்கிறது. இந்நிலையில், பண்பட்ட கேரள சமூகம், வழக்கம்போல- மதபேதம் கடந்த தங்களின் ஒற்றுமை உணர்வால், சங்-பரிவார்களின் முகத்தில் காறி உமிழ்ந்து, தக்க பதிலடி கொடுத்துள்ளது.

கணியாசேரி மகாவிஷ்ணு கோவி லின் காணிக்கை உண்டியல் வசூலை, அப்படியே, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார் அந்த கோவிலின் மேல்சாந்தி... பெரும்பிலாவு பருவக்குந்நு பள்ளிவாசல் உண்டியல் வசூல் அனைத் தையும், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியிருக்கிறது அங்குள்ள ஜமாஅத் நிர்வாகம். ஸ்தோத்திர காழ்ச்சத்தின் இரண்டு நாள் வசூலை முதலமைச்சர் நிவா ரண நிதிக்கு வழங்கியுள்ளது, மஞ்ஞப்றா, ஃபெரோனா, கிறித்தவ கோவில்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner