எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதவெறி, கடவுள்  மூட நம்பிக்கைகள் எந்த அளவு படுகொலைகளுக்கும், மோசடி, ஏமாற்று வித்தைகளுக்கும் மூலகாரணமாக உள்ளன என்பதை, கன்னத்தில் அறைந்து சுரீர்' என்று உணர்த்தும் வகையில் அன்றாடம் பல செய்திகளாக, ஊடகங்களிலும் செய்தித்தாள்களிலும் வந்தும்கூட பாடம் பெறுபவர்களாக நம் மக்கள் இல்லையே என்பது வேதனையையும், வெட்கத்தையும் தருவதாக அமைந்துள்ளது!

சமூக சீர்திருத்தவாதிகளாக, அறிவியல் மனப்பான்மைக்காகப் பிரச்சாரம் செய்யும் அமைப்புகளைச் சார்ந்தவர்களாகவும் மராட்டிய மாநிலத்திலும், கருநாடகத்திலும் திகழ்ந்த பிரபல அறிஞர்கள் கோவிந்த் பன்சாரே, கல்புர்க்கி, கவுரி லங்கேஷ் போன்றவர்களைப் படுகொலை செய்த இந்துத்துவா மதவெறி அமைப்புகளைச் சார்ந்த குற்றவாளிகளை இப்போது - இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்து, காவல்துறையின் நுண்ணறிவு மற்றும் குற்றத் தடுப்புப் பிரிவினர் அவர்தம் வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

தீவிரவாத இந்துத்துவா மதவெறி அமைப்புகள் சுமார் 10-க்கும் மேல் பற்பல மாநிலங்களில், பலப்பல பெயர்களில் இயங்கி வருகின்றன. அதை மத்திய அரசு கண்டுகொள்வதே இல்லை - காரணம், அவை சங் பரிவாரின் நிழல்கள்!

உ.பி. முதல் முதலமைச்சராக உள்ள யோகி ஆதித்யநாத் பெயரே குற்றவழக்கில் - கொலைத் தூண்டல் போன்றவற்றில் ஈடுபட்டதாக குற்றப் பத்திரிகையில் இருக்கின்றன. அந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால்,  முதலமைச்சரான பிறகு, அவர் பெயரை நீக்கவிட செய்த முயற்சிகள் வெற்றி பெற முடியாத அளவுக்குச் சட்டச் சிக்கல் உள்ளது.

இந்து சேனா' போன்ற சில அமைப்புகள் மேற்கூறிய சமூக சீர்திருத்தவாதிகளை, கொலை செய்துவிட நாட்டுத் துப்பாக்கிகளைச் செய்தும், பிறத் துப்பாக்கிச் சுடும் பயிற்சியை, பல நாள்கள் ஆள்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தந்து, வேலையை முடிக்கும்படி உத்தரவிடுகிறார்கள் என்பது குற்றவாளிகள் அளித்துள்ள வாக்குமூலத்தில் வெளியாகி உள்ளது - மிகவும் அதிர்ச்சியூட்டக் கூடியதாகும்!

இன்று வெளிவந்துள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளேட்டில் ஒரு செய்தி:

நாட்டுத் துப்பாக்கியை வைத்து கோவிந்த் பன்சாரே, கல்புர்க்கி, கவுரி லங்கேஷ் போன்றவர்களைச் சுட்டுக் கொன்ற பிறகு, அந்தத் துப்பாக்கியை, பூஜித்து' வருவதுபோல், இதனாலேயே மற்ற எஞ்சிய இலக்குக்குரியவர்களான மற்றவர்களை கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர்களையும், பேராசிரியர் கே.எஸ்.பகவான் (மைசூர் பகுத்தறிவுப் பேராசிரியர்) போன்றவர்களையும் கூடச் சுட்டுக் கொல்லத் திட்டம் என்று கூறியதோடு, அது மகாவிஷ்ணு கையில் உள்ள சங்கு, சக்கரத்தில் உள்ள சுதர்சனம்'' என்னும் சக்கரத்திற்கு நிகரானது, இதன்மூலம் அவர்களை மகாவிஷ்ணு தன் எதிரிகளை அழித்ததுபோல நாங்களும் (கொலையாளிகள்) செய்வோம்'' என்று கூறியுள்ளார்.

இதிலிருந்து இந்து மற்றும் மதவெறி பக்தர்கள் புரிந்துகொள்ள வேண்டிய செய்தி என்ன தெரியுமா?

1. கொலைக்குத் தூண்டியவர்கள் கடவுள் (நம்பிக்கை)கள்தான்; மகாவிஷ்ணு என்பது முக்கியமாகக் கோடிட்டுக் காட்டப்பட வேண்டியது.

2. முன்பு காந்தியாரைச் சுட்டுக்கொன்ற ஆர்.எஸ்.எஸ்.சில் பயிற்சி பெற்ற மராத்தி சித்பவன் பார்ப்பனரான நாதுராம் வினாயக் கோட்சே, தான் நீதிமன்றத்தில் கொடுத்த பகிரங்க வாக்குமூலத்தில், (‘‘May it Please, Your Honour'' என்ற தலைப்பில் புத்தகமாகவும் அது கிடைக்கிறது) பகவத் கீதை' படித்தேன், கிருஷ்ணனின் கீதோபதேசப்படிதான் மகாத்மா காந்தியைக் கொல்ல முடிவு எடுத்தேன்'' என்ற கருத்துப்பட கூறியிருக்கிறாரே!

மதவெறி, கொலை வெறிக்கு மூல காரண நஞ்சாகி உள்ளது என்பது இதன்மூலம் புரியவில்லையா?

இன்னுமா கடவுள், மூடபக்தி தேவை?

யோசியுங்கள் நண்பர்களே!

புரிந்துகொள்ளுங்கள், இளைஞர்களே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner