எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சேலம், ஆக. 18- சேலம் மாநகர மாவட்ட திராவிடர் கழகத்தின் அமைப்பாளர் ச.வெ.இராவண பூபதி அவர்களின் தாயார் திருமதி சரசு (எ) மாரியாயி அம்மாள் (வயது 78) அவர்கள் 16.8.2018 வியாழன் மாலை 4 மணியளவில் மறைவுற்றார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இதய சிகிச்சை செய்து கொண்ட அம்மையார் அவர்களை கழகத் தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் நேரில் பார்த்து நலம் விசாரித்தார்.

அம்மையார் அவர்கள், தனது மகன் இராவண பூபதி, தந்தை பெரியாரின் இயக்கமான திராவிடர் கழகத்தில் தொண்ட ராக இருப்பதைக் கண்டு மிக வும் மகிழ்ச்சியுடன் தனது மக னுக்கு ஆதரவாக இருந்துள்ளார். தனது மறைவுக்கு மரியாதை செலுத்த இயக்கத் தோழர்கள் வருவார்களா? என்று மகன் பூபதியிடம் கேட்டாராம். ஆம் வருவார்கள் என்று சொன்னா ராம் பூபதி. அப்படியானால் உங்கள் கொள்கைபடியே என்னை அடக்கம் செய்யவும். எந்த மத சடங்குகளையும் செய்ய வேண்டாம் என்று மறைவுக்கு முன்பாகவே பூபதியிடம் தெரிவித்து விட்டார்கள். அம்மையா ரின் கணவர் வெங்கட்ராமன், சேலம் பழைய பேருந்து நிலை யத்திலுள்ள இயக்கத்தின் புத்த கக் கடையை கவனித்து கொண் டிருந்தார். அம்மையாருக்கு இராவண பூபதி, மனோகரன் ஆகிய இரு மகன்களும், உமா ராணி மனோகரன், ரேணுகா சாரங்கபாணி ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.

பழனி.புள்ளையண்ணன், மாவட்டத்தலைவர் கே.ஜவகர், மண்டலச் செயலாளர் அ.ச. இளவழகன், மாநகரச் செயலா ளர் இளவரசன், மாநகரத் தலை வர் பி.வடிவேலு, மேட்டூர் மாவட்டத் தலைவர் கிருட்டிண மூர்த்தி, செயலாளர் கா.நா.பாலு உட்பட கழகத் தோழர்கள் அம்மையாருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner