எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கருத்துரிமை காத்தவர் என்ற தலைப்பில் கருத்தரங்கம்

திருச்சி, ஆக. 18- தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான டாக்டர் கலைஞர் கடந்த 7 ஆம் தேதி உடல்நலக்குறைவால் மறைவுற்றார். அதனையொட்டி திராவிட முன்னேற்ற கழக தலைமை கழகம் சார்பில் தமிழ் நாடு முழுவதும் நினைவேந்தல் கூட் டம் நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சியில் நேற்று மாலை (ஆக.17) கலைஞர் அறிவாலயத்தில் 'கருத்துரிமை காத்தவர் கலைஞர்' என்ற தலைப்பில் ஊடக வல்லுநர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். முன்னதாக ஊடக வல்லுநர்கள் கலைஞருக்கு நினை வேந்தல் செலுத்தினர். தொடர்ந்து இந்து குழுமம் தலைவர் இந்து.என்.ராம், டெக்கான்கிரானிக்கிள் ஆசிரியர் பகவான்சிங், நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால், இந்து தமிழ்திசை, நடுப்பக்க ஆசிரியர் சமஸ்,  சன்டிவி சிறப்பாசிரியர் ராஜா திருவேங்கடம், நியூஸ் 7 உள்ளடக்க ஆசிரியர் ஆர்.முத்துக்குமார், டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிரியர் அருண்ராம்,  ஊடகவியலாளர் அருணன், நியூஸ்18 தமிழ்நாடு ஆசிரியர் குணசேகரன், கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி ஆசிரியர் திருமா வேலன், பத்திரிக்கையாளர் ஆர்.மணி உள்ளிட்டோர் உரையாற்றினார்கள்.

நியூஸ் 18 குணசேகரன் பேசுகையில் தமிழ்நாட்டில் எளிய குடும்பத்தில் பிறந்த வர்கள் ஒரு பத்திரிக்கையின் ஆசிரியராக வருவதற்கு முக்கிய காரணம் திராவிட இயக்கமும், கலைஞரும்தான். அதற்கு என் முதற்கண் நன்றி. வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து பத்திரிக்கையாளர் கள்  கேள்விக்கும் பதில் சொல்பவர் கலை ஞர். கருத்துரிமைக்காக குரல் கொடுத்த வர் கலைஞர். அதற்காக தன்னுடைய ஆட்சியை இழந்தவர் கலைஞர். அவரச நிலை காலத்தில் ஒற்றை மனிதனாக போராடியவர் கலைஞர். ஒரு போதும் அவதூறு வழக்குகளை இவர் நாடியதில்லை. உரிமை மீறல் வழக்குகளை நாடியதில்லை. எழுத்தின் மீது தீராத காதல் கொண்டவர். நான் இந்த மேடையில் நிற்பதற்கும், சுயமரியாதையோடு வாழ வேண்டு மென்பதற்காக, ஆதிக்க சமுதாயம் இருக் கக் கூடாது என்பதற்காக எழுதவும், பேசவும் செய்தவர். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி, கலைஞர். சரித்திரத்தில் இடம் பெறுவது என்பது சலுகையால் பெறுவது அல்ல என கலைஞர் கூறியுள்ளார். அவர் இறந்த பின்பும் போராடி, அவ ருக்கான இடத்தை பெற்றுள்ளார்.

கருத்து சுதந்திரத்திற்கு இன்றும் ஆபத்து இருக்கிறது. நாளையும் ஆபத்து வரும் என்று பேசினார்.

தொடர்ந்து கலைஞர் தொலைக் காட்சி திருமாவேலன் பேசும்போது, கலைஞர் முதலில் பத்திரிக்கையாளர். பெரியாரும், அண்ணாவும் கருத்துரி மைக்காக திருச்சி மத்திய சிறையில் இருந்தார்கள். கருத்துரிமையின் காவலர் கலைஞர் என்பதற்கு நானே உதாரணம். கலைஞர் குறித்து நான் பலமுறை விமர்சித்து எழுதியும் அவர் என்மீது வழக்கு போடவில்லை. அடுத்தவரின் கருத்துரிமையையும் பாதுகாத்தவர் கலைஞர் என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து நியூஸ் 7 தொலைக்காட்சி முத்துக்குமார் பேசுகை யில், நான்கு வார்த்தை தத்துவம் தந்த வர் மறைந்த கலைஞர் அவர்கள். நன் றியோடு இந்த நிகழ்வில் கலந்து கொள் கிறேன். கருத்துரிமைக்கான களத்தை உருவாக்கி கொடுத்தவர் கலைஞர். சன் தொலைக்காட்சி திருவேங்கடம், இந்து தமிழ் சமஸ், ஊடகவியலாளர் அருணன், டைம்ஸ் ஆப் இந்தியா அருண் ராம், டெக்கான்கிரானிக்கிள் பகவான்சிங் அதைத் தொடர்ந்து நக்கீரன் கோபால் பேசுகையில், கருத்துரிமையை மட்டும் எடுத்துக் கொள்ளவில்லை. அதை அனைத் தையும் பத்திரிக்கையாளர்களுக்கு பங் கிட்டு கொடுத்தவர் கலைஞர். பொடா சட்ட எதிர்ப்பை முன்னெடுத்தவர் கலைஞர் எனப் பேசினார்.

நிறைவாக இந்து என்.ராம் பேசுகை யில், கலைஞர் ஒரு இலக்கிய இதழா ளர். தகவல்களின் அரசன். விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள்தான் இன்றைக்கு அரசுகளில் இருக்கிறார்கள் இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தி.மு.க. செயல்  தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்க ளவை உறுப்பினர் கனிமொழி, துரை முருகன், தயாநிதிமாறன், உதயநிதி ஸ்டாலின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு, திருச்சி சிவா எம்.பி., திராவிடர் கழகம் மாவட்ட தலைவர் ஞா-.ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ் மற்றும் பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையி னர், மூத்த பத்திரிக்கையாளர்கள், தி.மு. கவினர் பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner