எழுத்துரு அளவு Larger Font Smaller Font

'மெட்ராஸ் டே!'

இந்த நாள் ஆகஸ்டு 19 என்பது மெட்ராஸ் டே' என்று 2004 முதல் அழைக்கப்படுகிறது. இந்நாளில் முக்கிய இடங்களுக்குச் சென்று திராவிடர் கழகம் சம்பந்தப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த மாவீரர்கள்பற்றி பிரச்சாரம் செய்து வருகிறது. இன்று இருக்கும் இந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டை கிழக்கிந்திய கம்பெனியால் 1639 ஆகஸ்டு 22 அன்று வாங்கப் பட்டது.

(அன்று அது கிராமம் - இன்றோ பெருநகரம்!)

என்னே மனிதநேயம்!

திருச்சி மாநகரக் காவல் நுண்ணறிவுப் பிரிவில் தலை மைக் காவலராகப் பணியாற்றும் செல்வராணி என்பவர் மேனாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து கவிதை ஒன்றை சமூகவலை தளங்களில் பதிவு செய்த காரணத்துக்காக , அவர் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார்.

(கலைஞர் மறைவிற்கு அ.தி.மு.க. அரசு உரிய மரியாதை கொடுத்து நடந்துகொண்டதா என்பதற்கு வெட்கம்கெட்ட சாட்சியம்தானே இது - ஒரு வகையில் மகிழலாம் - ஜெயலலிதா உயிரோடு இருந்தால், இந்தப் பெண் டிஸ்மிஸ்ஸே' செய்யப்பட்டிருப்பார். இந்த ஒப்பிட்டள வில் இ.பி.எஸ். ஆட்சியைப் பாராட்டலாம்தான்.)

கண் எரிச்சல்

பழனி - கோவில் திருவிழாவில் அதிக ஒளி உமிழும் மின்விளக்குப் பயன்பாட்டால் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர் களுக்குக் கண் எரிச்சல்!

(பழனி முருகன் இதைக்கூட சரி செய்யக்கூடாதா? பொதுவாக வீடியோ கிராபர்கள் தங்களுக்கு ஒளி அதிகம் தேவை என்ற முறையில் இத்தகு ஏற்பாடுகளைச் செயகிறார் கள்.இதற்கொரு ஒழுங்குமுறை ஏற்படுத்தப்பட வேண்டும்.).

தலாக்! தலாக்!! தலாக்!!!

அரியானா மாநிலம் யமுனை நகர் மாவட்டத்தில் கண வரிடம் மூன்று முறை தலாக் சொல்லிவிட்டுப் பிரிந்துள்ளார் மனைவி.

திருமணம் ஆனதிலிருந்து என்னை நீங்கள் கொடுமைப் படுத்துகிறீர்கள்'' என்று குறிப்பிட்டு, தலாக், தலாக், தலாக் என்று மூன்று முறை எழுதி வைத்துவிட்டு, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

(ஓடம் வண்டியில் ஏறும், வண்டி ஓடத்திலும் ஏறும் என்பது ஒரு பழமொழி).

'வாழ்க எழுத்துரிமை!'

பீகார் மாநிலம் மகாத்மா காந்தி பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர் சஞ்சய்குமார் வாஜ்பேயி பற்றி சித்தாந்த ரீதியாக முகநூலில் பதிவிட்டதால், ஒரு கும்பல் அவரை வீடு புகுந்து தாக்கியதோடு, வீதியில் இழுத்து வந்தும் உதைத்ததால், படுகாயத்துக்கு ஆளான அந்த உதவிப் பேராசிரியர் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

(சித்தாந்த ரீதியாக ஆர்.எஸ்.எஸ்.பற்றியோ, அதனைச் சார்ந்தவர்கள்பற்றியோ விமர்சித்தால் அதற்குப் பரிசு அடி - உதைதான். காரணம் இந்து மதக் கடவுள்களின் கைகளிலேயே கொலைக் கருவிகள்தானே இருக்கின்றன.)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner