எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருப்பதி, ஆக.19 திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாதம் சேவையில் போலி டிக்கெட்டுடன் தரிசனத்திற்கு செல்ல முயன்ற பக்தர்கள்மீது விஜிலென்ஸ் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் அதிகாலையில் சுப்ரபாத சேவையுடன் சாமியை துயில் எழுப் புவது வழக்கமாம். ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் நடைபெறும் சேவைகளில் முதல் சேவையான சுப்ரபாத சேவை மிகவும் சிறப்பு வாய்ந்ததாம். இந்தத் தரிசனத்திற்காக நேற்று காலை மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் வந்திருந்தனர். அவ்வாறு வந்த பக்தர்கள் வைத்திருந்த டிக்கெட்டுகளை வைகுண்டம் காத்திருப்பு அறையில் இருந்த ஊழியர்கள் சோதனை செய்தனர். இச்சோதனையில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 4 பக்தர்கள் கொண்டு வந்த டிக்கெட்டுகள் போலியானவை என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரைச் சேர்ந்த பிரபாகர் என் பவரிடம் இந்த டிக்கெட்டுகளை வாங் கியதாகவும் ஒரு டிக்கெட் ரூ.4 ஆயிரம் கொடுத்து வாங்கியதாக தெரிவித்தனர். இதையடுத்து தேவஸ்தானம் விஜி லென்ஸ் அதிகாரிகள் இது குறித்து வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவை டிக்கெட் பொது கோட்டாவில் ரூ.120க்கும் விற்கப்பட்டு வரும் நிலையில் பரிந்துரை கடிதங்கள் மூலம் வழங் கப்படும் கோட்டாவில் ரூ.220 விற்கப் பட்டு வருகிறது. இந்நிலையில் ரூ.4 ஆயிரத்திற்கு இந்த டிக்கெட்டுகளை போலியாக தயார் செய்து விற்பனை செய்த மகாராஷ்டிர மாநிலம் சோலாப் பூரைச் சேர்ந்த பிரபாகரனை கைது செய்வதற்காக காவல்துறையினர் மூலம் தேவஸ்தான அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதைபோன்று பிரபாகர் எத்தனை பேருக்கு போலி டிக்கெட் வழங்கினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner