எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மேற்கு வங்காள மாநில முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்திக்கு ராஜீவ் காந்தி விருது

புதுடில்லி, ஆக.21 அமைதி, மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆற்றிய பணியை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ராஜீவ் காந்தி சத்பவனா விருது வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2016- 2017 ஆம் ஆண்டுக்கான இவ்விருதுக்கு மேற்கு வங்காள மாநில முன்னாள் ஆளுநரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி தேர்வு செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி பிறந்தநாளையொட்டி, நேற்று டில்லி ஜவகர் பவனில் இவ்விருது வழங்கும் விழா நடைபெற்றது.

நாடாளுமன்ற காங்கிரசு தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், விருது கமிட்டியின் தலைவர் கரன்சிங் ஆகியோர் கோபாலகிருஷ்ண காந்திக்கு விருது வழங்கினர்.

இது, பாராட்டு பத்திரமும், ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும் கொண்டது ஆகும்.

ஆதாரப்பூர்வமாக ஒப்புதல்

மோடி ஆட்சியில்  மத வன்முறைகள் அதிகம்

புதுடில்லி,ஆக.21 2014 இல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவில் மதவெறி வன்முறைகள் 30சதவீதம் அதிகரித்துள்ளது என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன. இன்னும் குறிப்பாக 2017 இல் மிக அதிகமான வன்முறைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த விவரங்களை மாநிலங்களவையில் புதன்கிழமை மத்திய உள்துறை அமைச்சகமே எழுத்துப்பூர்வமான பதிலில் ஒப்புக் கொண்டிருக்கிறது. 2014 இல் 644 மதவெறி வன்முறைகள் பதிவாகின. அதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை. 2015 இல் 751 வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன; 97 பேர் கொல்லப்பட்டனர். 2016 இல் 703 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின; 86 பேர் கொல்லப்பட்டனர். 2017 இல் 822 மதவெறி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 111 பேர் கொல்லப்பட்டனர். ஒவ்வொரு ஆண்டும் மதவெறி வன்முறை அதிகரித்து வந்துள்ளது. நாட்டை ஆளும் பாஜக - ஆர்எஸ்எஸ் கூட்டத்தின் பிரிவினைவாத - பிற மதத்தவரை வெறுத்து ஒதுக்கி, அழித்து ஒழிக்கும் கொடூரமான சித்தாந்தமே இதற்கு அடிப்படை காரணம். மோடியின் நான்காண்டு கால ஆட்சி யின் உண்மை நிலவரம் இதுதான்.

பட்டினிப் போராட்டம் நடத்தும் உரிமையை அரசு மறுக்க முடியாது!

பாஜகவுக்கு ஹர்திக் படேல் எச்சரிக்கை

காந்திநகர், ஆக. 21 - குஜராத்திலுள்ள பட்டிதார் மக்களுக்கு இடஒதுக்கீடு கேட்டுப் போராட்டம் நடத்தி வருபவர் ஹர்திக் படேல். 25 வயது இளைஞரான இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போராட்டம் நடத்தியபோது, பாஜக அரசுகடும் அடக்குமுறைகளை ஏவி விட்டது. ஹர்திக் மீது பொய்வழக்கு போட்டு சிறையிலும் அடைத்தது. எனினும் படேல் தொடர்ந்து போராடி வருகிறார். தற்போது சாகும்வரை பட்டினி இருக்கப்போவதாக அறிவித்துள்ள ஹர்திக் படேல்,

இதற்காக அகமதாபாத்தின் நிகோல் நகரில் இடம் கேட்டு காவல்துறையினரிடம் மனு அளித்திருந்தார். ஆனால், காவல்துறையினர் அதற்கு அனுமதி மறுத்து விட்டனர். இதையடுத்து, குஜராத் பாஜக முதல்வர் விஜய் ரூபானிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள ஹர்திக் படேல், போராட்டம் நடத்துவது எனது அரசமைப்புச் சட்டம் எனக்கு வழங்கிய உரிமை; இதற்கு அரசு ஒத்துழைப்பு வழங்கியாக வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹர்திக் படேலுக்கு ஆதரவாக இந்தப் போராட்டத்தில் வேறு அமைப்பினர்களும் கலந்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner